சீரியலுக்கு வருவதற்கு முன்பு கொழுக்,மொழுக்குன்னு இருந்த பாண்டியன் ஸ்டோர் நடிகையா இது.! வைரலாகும் புகைப்படம்!!

chitra

சின்னத்திரையில் பல்வேறு விதமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு மக்களை கவர்ந்து வருகின்றன.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்து கொண்டு இருப்பது பாண்டியன் ஸ்டோர்.இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் மற்றும் காதல் ஜோடிகளுக்கு பிடித்தமானதாக இந்த சீரியல் அமைந்துள்ளது.

இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன், தங்கராஜன், சரவணன், விக்ரம் போன்ற பலர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் மக்களுக்கு பிடித்தமானவர்களாக முல்லை, கதிர் மட்டுமே இருந்து வருகிறார்கள்.ஏனென்றால் இந்த சீரியலில் முல்லை, கதிர் ஜோடி சிறப்பாக நடித்து வருவதால் மக்களுக்கு பிடித்துப்போய் உள்ளது.

இந்த இருவரும் தான் இந்த சீரியலுக்கு ஒரு முக்கிய புள்ளியாக இருக்கிறார் என பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
சித்ரா அவர்கள் ஆரம்பத்தில் விஜேவாக தான் அறிமுகமானார். இதனையடுத்து படிப்படியாக தனது திறமையை வெளிப்படுத்தி தற்போது சீரியல்களில் பிரபலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர் .

அவ்வபொழுது ரசிகர்களுடன் சாட்டிங்கில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது சாட்டிங்கில் ஈடுபட்டிருந்த பொழுது ரசிகர் ஒருவர் உங்களின் பழைய புகைப்படத்தை கேட்க அதற்கு சித்ரா அவர்கள் தனது பழைய படங்கள் பலவற்றை அள்ளி வீசியுள்ளார். அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

chitra
chitra
chitra