சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கில் அவரது கணவரான ஹேம்நாத்தை போலீசார்கள் தற்பொழுது வரை விசாரித்து வருகிறார்கள்.
மேலும் ஹேமநாத்தின் தந்தை புதிதாக ஒரு தகவலை வெளிப்படுத்தி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளார்.
அந்த தகவல் என்னவென்றால் சித்ராவுக்கு இது முதல் காதல் இல்லை இவர் ஏற்கனவே 3 முறை காதலித்து பிரேக்கப் ஆனதாகவும் ஒருசில போன்கால்கள் வந்தால் பதட்டமாகி திடீரென வெளியே சென்று விடுவார் எனவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து சித்ராவின் மீது பல குற்றச்சாட்டுகள் எழும்பி வந்த நிலையில். சித்ரா இருந்த அன்று சம்பவத்தை அறிந்த ஹேமநாத்தின் தந்தையான ரவிச்சந்திரன் மூலமாக சித்ராவின் தாயாருக்கு தகவல் தெரியவந்துள்ளது.
அதன்பின்பு சித்ராவின் இறுதி ஊர்வலம் எல்லாம் முடிந்தவுடன் ஒரு சில நாட்கள் கழித்து ஹேம்நாத்தின் மீது குற்றம் சுமத்த ஆரம்பித்துவிட்டார் சித்ராவின் தாயார் என ரவிச்சந்திரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும் சித்ராவின் தொலைபேசியில் நம்பர் வந்தாலே அவர் தனியாக சென்று பேசுவார் அந்த நம்பரை முழுமையாக அழித்து விடுவார் என்றும் எனது மகன் என்னிடம் ஏற்கனவே கூறியிருக்கிறார் என புதிய தகவலை மீண்டும் வெளியிட்டு ரசிகர்களை அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார் ரவிச்சந்திரன்.
தற்போது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.