சினிமா உலகில் வாரிசு நடிகர்களின் பிரபலங்கள் தற்போது எடுத்தவுடனேயே ஹீரோவாகவும், ஹீரோயினாகவும் மாறிவிடுகின்றனர் ஆனால் எந்தவொரு பின்புலமும் இல்லாமல் இருக்கும் திறமையானவர்கள் சினிமா உலகில் நல்லதொரு இடத்தைப் பிடிக்க ஆரம்பத்தில் பாடாத இன்னல்களை சந்தித்து பின்தான் சினிமாவில் ஜொலிக்கின்றனர்.
அந்த வகையில் சின்னத்திரையில் தொகுப்பாளராக தனது பயணத்தை மேற்கொண்டு படிப்படியாக ஹீரோயின் என்ற அந்தஸ்தை தன் வசப்படுத்தியவர் விஜே சித்ரா. தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார். அதிலும் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் இவருக்கு பேரும், புகழையும் அள்ளி கொடுத்தது.
அவ்வபோது போட்டோ ஷூட் நடத்தினர் அது ரசிகர்களை கவரும்படியாக அமைந்ததால் இவருக்கு என ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகத் தொடங்கியது. இப்படி ஓடிக்கொண்டு இருந்த சித்ராவுக்கு வெள்ளித்திரையில் “கால்ஸ்” என்ற திரைப்படம் கைகொடுத்தது அதில் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து கொடுத்து இருந்தார்.
ஆனால் இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே அவர் இந்த மண்ணுலகை விட்டு வெளியேறினார். இச்செய்தி பாண்டியன் ஸ்டோர் குடும்பம் மற்றும் அவரது ரசிகர்களையும் பெரிதும் பாதித்தது. இப்படி இருக்க vj சித்ரா ரசிகர்கள் அவரது ஞாபகம் எப்போது எல்லாம் வருகிறதோ அப்போது எல்லாம் அவர் நடத்திய போட்டோ ஷூட் நடத்திய புகைப்படத்தை வெளியிட்டு ஆறுதல் அடைகின்றனர்.
அந்த வகையில் வெளியான புகைப்படம் ஒன்று பாகுபலி படத்தில் வரும் அனுஷ்கா எப்படி இருப்பாரோ அதுபோல விஜே சித்ராவும் கம்பீரமாக இருக்கும் புகைப்படம் தற்போது இணைய தளத்தில் வேகம் எடுத்து உள்ளது.