சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு ஃபவ் ஸ்டார் ஹோட்டலில் மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் அவரது இழப்பு சின்னத்திரையில் இருந்த பல பிரபலங்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.
மேலும் அவரது தற்கொலை வழக்கில் அவரது கணவரான ஹேம்நாத் அவர்களை கைது செய்யப்பட்டு தற்போது வரை விசாரணை நடத்தி வருகிறார்கள் காவல்துறையினர்.
இந்நிலையில் சித்ரா நடித்து வந்த பாண்டியன் ஸ்டோர் சீரியலில் தற்பொழுது காவியா என்ற நடிகை நடித்துவருகிறார் அவரோடு சேர்த்து சித்ராவின் கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்து வந்த டப்பிங் ஆர்டிஸ்ட்டையும் அந்த சீரியல் படக்குழு மாற்றியுள்ளது.
இதனால் ரசிகர்கள் பலரும் சித்ராவின் நினைவாக இருந்தது அந்த குரல் மட்டும் தான் அதையும் இப்பொழுது நீங்கள் மாற்றி விட்டீர்கள் என பாண்டியன் ஸ்டோர் படக்குழுவினரை திட்டி வருகிறார்கள்.
ஒரு சில ரசிகர்கள் இந்த சீரியலை பார்த்து வருவதே அந்த குரலுக்குகாகதான் தான் இதையும் நீங்கள் மாற்றிவிட்டால் இனிமேல் இந்த சீரியலை நாங்கள் பார்க்க மாட்டோம் எனவும் கூறி வருகிறார்கள்.
தற்போது இந்த தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.