சின்னத்திரை ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் நடிகை vj சித்ரா, இவர் மரணம் ரசிகர்களிடையேவும் மக்களிடமும் பிரபலங்கள் இடையையும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது.
சித்ரா மிகவும் தைரியமான பெண் எனவும் அவரது நண்பர்கள் கூறியுள்ளார் அதனால் அவர் தற்கொலை செய்துகொள்ள வாய்ப்பில்லை எனவும் கூறினார்கள். அதே போல் சித்ராவின் அம்மா அவருடைய வருங்கால கணவர்தான் ஹோட்டலில் வைத்து ஏதோ செய்து விட்டார் என குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சித்ராவின் மறைவிற்கு பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அதே போல் சித்ராவின் மறைவு குறித்து ஷாலு ஷம்மு, கீர்த்தி சுரேஷ் மனோபாலா, தீனா ஆகியோர்களும் தங்களது இரங்கலை தெரிவித்தார்கள
இந்த நிலையில் இறந்து போன நடிகை சித்ராவின் வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சித்ரா இறப்பதற்கு முன்பு விஜயிடம் தனக்கு இருந்த ஆசையை கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது என் திருமணத்திற்கு நான் தளபதி விஜய்யை விருந்தினராக அழைப்பேன் ஒவ்வொருவருக்கும் வயது ஆக ஆக இளமை குறைந்துவிடும் ஆனால் தளபதி விஜய்க்கு மட்டும் இளமை கூடிக்கொண்டே போகிறது என அந்த வீடியோவில் கூறியுள்ளார்.
இந்த வீடியோ விஜய் ரசிகர்களிடையே கண்ணீரை வரவழைத்துள்ளது வீடியோவை ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.
Mrg -க்கு Invite பண்ணனும் -னு தான் தளபதிய இன்னும் பாக்காமா இருந்தாங்கலாம் .. 💔🚶#Master @actorvijay pic.twitter.com/JP27T3fxVx
— Sᴀᴋᴛʜɪ ᴠꜰᴄ ❗️ (@Sakthii_VFC) December 10, 2020