சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9ஆம் தேதி தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் அவரது இழப்பு சின்னத்திரைக்கு ஒரு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது.
மேலும் சித்ராவின் தற்கொலைக்கு முக்கிய காரணம் அவரது கணவர் ஹேம்நாத் அதிக மன அழுத்தமே அதனால் தான் சித்ரா தற்கொலை செய்துகொண்டார் என சமீபத்தில் போலீசார் தெரிவித்தனர்.
ஹேமநாத் அதன் அடிப்படையில் கைது செய்து தற்பொழுது வரை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள் அதில் பல உண்மைகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது என தகவல் கிடைத்துள்ளது.
இந்நிலையில் சித்ராவின் தற்கொலை தொடர்பாக சித்ராவின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் ஸ்ரீபெரும்புதூர் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ தனது அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர் அதுமட்டுமல்லாமல் நடிகை சித்ராவின் நெருங்கிய தோழியான சரண்யா விடமும் கோட்டாட்சியர் திவ்யஸ்ரீ விசாரணை நடத்தி உள்ளாராம்.
அதன்அடிப்படையில் சித்ராவின் தற்கொலைக்கு பணிசுமைகள் ஒருபக்கம் இன்னொரு பக்கம் அவரது கணவர் சித்ராவை சந்தேகப்பட்ட தாலும் சித்ரா தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும் சித்தரா தனது மாமனாரிடம் ஹேம்நாத் என்னை சந்தேகப்படுகிறார் என்று அழுதபடி போனில் கூறியுள்ளாராம்.
ஆனால் அது போன்ற தகவல்களை சித்ராவின் மாமனாரான ரவிச்சந்திரன் எதுவும் கூறவில்லை இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவேற்காட்டில் உள்ள ஒரு மண்டபத்தை சித்ரா ஹம்மாத் அவர்கள் இருவரது தாய் தந்தையருடன் முன்பதிவு செய்ய சென்ற போது எடுத்த வீடியோ, புகைப்படங்களை சித்ராவின் மாமனார் வெளியிட்டிருந்தார்.
தற்போது இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.