மறைந்துபோன சித்ராவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? முதல் திருமணமும் நின்றுவிட்டது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள்

chitra-latest

நடிகை சித்ரா விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர் என்ற சீரியலில் நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் இவர் கடந்த 9ம் தேதி அதிகாலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.  இந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் சித்ரா மிகவும் தைரியமான பெண் அவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழை இல்லை என பலரும் கூறி வந்த நிலையில் சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அறிக்கை வெளியிட்டார்கள் போலீசார் அதில் சித்ரா தற்கொலை செய்து கொண்டார் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

ஆனாலும் இவர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் யார் என்பதை விசாரிக்க ஆரம்பித்ததும் ஹேமந்த்  மற்றும் சித்ராவின் அம்மா என தெரியவந்துள்ளது. மேலும் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

சாதாரண பெண்ணாக வாழ்ந்து வந்த சித்ரா தொலைக்காட்சி தொகுப்பாளராக நுழைந்து பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழின் உச்சத்திற்கு சென்றவர்.  இவருக்கு வருமானமும் அதிகரித்தது. சீரியலில் நடித்து வந்த சித்ராவிற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப் பட்டதாக கூறப்படுகிறது.

chitra-vj
chitra-vj

அதுமட்டுமில்லாமல் விளம்பரதாரர் நிகழ்ச்சி கல்லூரி மற்றும் கடை திறப்பு விழாக்கள் என இரவு பகல் பாராது உழைத்து வந்தார்,  உள்ளூர் விளம்பரங்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களிலும் விளம்பரங்களில் நடித்து சம்பாதித்து வந்தார்.

மிகக்குறுகிய காலத்திலேயே நம்ப முடியாத வகையில் 15க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, இவை அனைத்தும் அவரது பாஸ்போர்ட் மூலம் தெரியவந்த தகவல்.  சித்ரா தனக்கான சொந்த பங்களா வீடு ஒன்றை கட்டியுள்ளார் இதன் இறுதிகட்ட பணிகள் நடந்து வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஆடி கார் ஒன்றையும் விலைக்கு வாங்கினார்.

அங்குதான் இவருக்கு கடன் சுமை ஆரம்பித்துள்ளது அவருக்கு நெருக்கடி எனக்கூறினார்கள் தொகையை செலுத்தவும் அவருக்கு அதிகரித்தது, அதனால் சித்ரா சீரியலில் தொடங்கி கலை நிகழ்ச்சி என அனைத்திலும் பங்கேற்று வந்தார் ஆனால் ஒரு காலகட்டத்தில் கொரோனாவால் அனைத்தும் முடக்கப்பட்டது.

அதனால் சேமித்து வைத்திருந்த பணத்தை வைத்து சூழ்நிலையை சமாளித்து வந்தார்,  இதற்கிடையில்தான் ஹேமந்த் உடன் காதல் ஏற்பட்டது. ஆனால் சித்ராவின் வீட்டிற்கு மிகப்பெரிய எதிர்ப்பு நிலவிய நிலையில்,  மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் சித்ராவின் பணம் ஹேமந்த்திற்க்கு செலவழிக்க படுவதாக சித்ராவின் தாய் விரும்பவில்லை எனத் தெரிகிறது.

chitra

அதனால் சித்ரா மற்றும் ஹேமந்த் கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்து கொண்டார்கள்.  இந்த நிலையில் பிப்ரவரி மாதம் திருமணம் நடக்க இருந்த நேரத்தில் அதை நிறுத்தவும் தாய் சித்ராவின் தாய் முற்பட்டதாக தெரிகிறது. மேலும் சித்ராவிடம் வருமானம் தொடர்பாக அவரது தாய் விசாரித்ததும் ஹேமந்த் பற்றி தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டதாலும் மன உளைச்சல் ஏற்பட்டு வீட்டிற்கு செல்லாமல் ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார்.

அது மட்டுமில்லாமல் ஏற்கனவே ஒரு முறை திருமணம் நின்றுபோன நிலையில் இரண்டாவது முறையும் தனது திருமணம் நின்று போனால் என்ன செய்வது என்ற குழப்பத்தில் அவர் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார்,  கடுமையான மன அழுத்தத்தாலும் சில தனிப்பட்ட விவகாரங்களுக்கும் சித்ரா இந்த சோகமான முடிவை தேடிக் கொண்டிருக்கலாம் என போலீசார் கூறி உள்ளார்கள்.