தமிழ் சினிமா உலகின் ஆரம்பத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் போகப்போக ஆக்சன் திரைப்படங்களில் தனது திறமையை காட்ட ஆரம்பித்தவர் நடிகர் சிம்பு இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மாநாடு திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது குறிபிடத்தக்கது இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிம்பு சந்தோஷமாக தனது அடுத்தடுத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சிம்பு கையில் தற்பொழுது வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார், பத்துல தல போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இதனால் நாளுக்கு நாள் சிம்புவின் சினிமா மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது தற்போது ஒரு படத்திற்கு 2௦ கோடி சம்பளம் வாங்குவதாக தகவல்களும் வெளிவருகின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் சினிமா பிரபலம் ஒருவர் நடிகர் சிம்புவுக்கு சின்ன வீடு தான் ரொம்ப கரெக்டாக இருக்கும் என ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார் இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. தமிழ் சினிமா உலகில் இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்து பணியாற்றி வருபவர் பக்யராஜ் இவர் சினிமா உலகில் கால்தடம் பதித்த இதுவரை 50 வருடங்கள் ஆகி உள்ளதாம்.
இதையடுத்து நடிகர் பாக்யராஜிடம் மேடையில் பல்வேறு விதமான கேள்வி கேட்கப்பட்டது. அதிலும் குறிப்பாக பாக்யராஜ் நடித்த திரைப்படங்கள் ஒரு சில பெயர்களை சொல்லி அந்தப் படத்தில் இப்பொழுது இருக்கும் இந்த ஹீரோ எந்த படத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என நீங்கள் சொல்ல வேண்டும் என கேட்டுள்ளனர்.
அப்பொழுது நீங்கள் சின்னவீடு படத்தில் பின்னி பெடலெடுத்து விட்டீர்கள் அந்த படத்தில் இப்பொழுது எந்த நடிகர் நடித்தால் சிறப்பாக இருக்கும் என கேள்வி எழுப்பினார் அதற்கு உடனே பாக்யராஜ் சின்ன வீடு சிம்புவுக்கு தான் செம பொருத்தமாக இருக்கும் என கூறியுள்ளார் உடனே சுற்றியிருந்த அனைவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர். அப்படி நான் என்ன தப்பாக சொல்லிவிட்டேன் எல்லோரும் சிரிக்கின்றனர் உண்மையில் சின்னவீடு படம் சிம்பு காணப் படம் தான் என கூறினார்.