பாடகி சின்மயி பல சர்ச்சைகளை சந்தித்தவர் இவர் வைரமுத்து மீது அடுக்கடுக்காக புகார்களை வைத்தார் இந்த சர்ச்சைகள் ஓய்ந்த பிறகு கடந்தாண்டு இவருக்கு இரட்டை குழந்தை பிறந்த நிலையில் ஒரு வருடம் கழித்து தற்பொழுது முதன்முறையாக குழந்தைகளின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த சப்தஸ்வரங்கள் என்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அதில் வெற்றி வெற்றி பெற்றவர் சின்மயி இவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார் அது மட்டும் இல்லாமல் இவர் திறமையை பார்த்த ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இசையில் பின்னணிப் பாடகியாக அறிமுகம் செய்தார்.
கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் தெய்வம் தந்த பூவே என்ற பாடல் மூலம் சின்மயி அறிமுகமானார் இதனை அடுத்து டி இமான், ஹாரிஸ் ஜெயராஜ், ஜிவி பிரகாஷ், இளையராஜா என பல முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். இவர் பாடகி மட்டுமல்லாமல் புகழ்பெற்ற டப்பிங் ஆர்டிஸ்ட்.
தமிழில் வெளியாகிய சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் டப்பிங் கொடுக்க ஆரம்பித்தார் அதன் தொடர்ந்து சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா என பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் கொடுத்துள்ளார் இவர் 2014 ஆம் ஆண்டு ராகுல் ரவீந்திரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணம் ஆகி 8 வருடங்களாக குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருந்து வந்த நிலையில் கடந்த ஆண்டுதான் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.
ஆனால் சின்மயி கர்ப்பமாக இருக்கிறேன் என்ற தகவலை வெளியிடாமல் இருந்து வந்தார் அதனால் இவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டாரா என்ற சர்ச்சை எழுந்தது பின்னர் தான் கர்ப்பமாக இருக்கும் பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு அந்த சர்ச்சைக்கு மிகப்பெரிய முற்றுப்புள்ளி வைத்தார்.
குழந்தை பிறந்த பிறகு அவர்களின் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருந்து வந்த சின்மயி அவர்களின் முதல் பிறந்தநாள் அன்று முதல் முறையாக குழந்தைகளின் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார், புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் குழந்தை மிகவும் க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.