கட்டிப்பிடித்தது ஒரு குத்தமா… DD யை மீடூ-வில் சிக்க வைத்து அழகு பார்க்கும் சின்மயி.! இதோ அதிகாரபூர்வ ஆதாரம்

dd
dd

தென்னிந்திய சினிமா உலகில் பின்னணி பாடகியாக வலம் வருபவர் நடிகை சின்மயி இவர் குரலுக்கு பல ரசிகர்கள் அடிமை என்றே கூறலாம் அந்த அளவு இவரின் குரல் இனிமையாக இருக்கும் அது மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறார்.

சின்மயி சமீபத்தில் சமூக வளைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அதில் பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்து சினிமா உலகையே அதிர வைத்தார். இதன் காரணமாக சின்மயி பெயர் சினிமா உலகில் டேமேஜ் ஆனது இதனைத்தொடர்ந்து  சின்மயி போல் பலரும் சமூக வளைதளத்தில் பலரும் பாதிக்கப்பட்டதை வெளிப்படையாக தெரிவித்து வந்தார்கள்.

அனைத்து தகவலையும் பாடகி சின்மயி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.  அப்படி இருக்கும் வகையில் நீண்ட நாட்களாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்த சின்மயி தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பின்னணி பாடகர் கார்த்திக் பற்றி ஒரு சர்ச்சையான கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதாவது பின்னணி பாடகர் கார்த்திக் மீது  பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை கூறியுள்ளார் பாடகி சின்மயி, மேலும் கார்த்தி பல பெண்களிடம் தவறாக மெசேஜ் அனுப்புவது தவறாகத் தொடுவதாக வெளிநாட்டு தமிழ் பாடகி ஒருவர் குற்றச்சாட்டை சின்மயி பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து பின்னணி பாடகர் கார்த்திக் நான் அப்படிப்பட்டவன் அல்ல எனவும் தான் அப்படி செய்திருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அவர் வைக்கும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுக்கு இன்றுவரை எந்த ஒரு தீர்வும் கிடைக்காமல் இருக்கிறது இந்த நிலையில் கார்த்திக் குறித்து சர்ச்சையான பதிவு ஒன்றை சின்மயி இப்படி பதிவிட்டு உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் மாகாபா மற்றும் தொகுப்பாளினி டிடி இருவரும் கார்த்திகை வரவேற்றார்கள் அப்பொழுது தொகுப்பாளினி டிடி யை கார்த்திக் சாதாரணமாக அரவணைத்தார்.  இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில். #metoo வால் யாருடைய வாழ்க்கையும் கெடுக்கவில்லை  என்றும் இது ஆண்களின் உலகம் பாலியல் வாதிகளின் உலகம் என்றும் சர்ச்சையான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

chinmayi
chinmayi