சூர்யாவின் படத்தை பார்த்து அழும் தீர்க்கும் சீன மக்கள்..! வைரலாகும் வீடியோ.

surya-
surya-

நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் இவர் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி படமாக மாறுவதால் சூர்யாவின் மார்க்கெட்டும் அதிகரித்துள்ளது இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சமூக அக்கறை உள்ள ஒரு திரைப்படமாக இருந்தது அந்த படம் வெளியாகி வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா பாலாவுடன் மீண்டும் ஒருமுறை கைகொடுத்து வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இதனை தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் ஒரு படம் சுதா கொங்காரா உடன் ஒரு படம் வெற்றிமாறனுடன் வாடிவாசல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார்.

ஒரு பக்கம் படங்களில் நடித்துக் கொண்டிருக்க மறுபக்கம் நடிகர் சூர்யா தனது 2d என்டர்டைன்மென்ட் மூலம் பல்வேறு சிறந்த படங்களை தயாரித்தும் வருகிறார் அப்படி கடைசியாக விருமன் படத்தை சூர்யா தயாரித்தார் படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் தற்பொழுது லாபத்தை அள்ளி வருகிறார் சூர்யா. இப்படி இருக்கின்ற நிலையில் சூர்யா பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

2021 ஆம் ஆண்டு டிஜே ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெய் பீம் இந்த படம் முழுக்க முழுக்க சமூக அக்கறை உள்ள கருத்துக்களை எடுத்துரைக்கும் படமாக இருந்தது படம் வெளியாகி வெற்றி பெற்றது இந்த படம் beijing international film festival நிகழ்ச்சியில் திரையிட்டனர் இந்த படத்தைப் பார்த்த சீன மக்கள் கண்கலங்கி அழுதனர் அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ தற்பொழுது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.