சினிமா உலகில் டாப் ஹீரோக்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகைகள் கூட ஒரு கட்டத்தில் அதே ஹீரோவுடன் ஹீரோயினாக நடிப்பது சினிமாவுலகில் நடந்தது ஏன் குறிப்பாக தமிழ் சினிமாவிலேயே அப்படி நடந்த சம்பவங்கள் பல எடுத்துக்காட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிகை மீனா இளம் வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்து..
பின் முத்து படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார் அதே போல தான் தற்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. 2010ஆம் ஆண்டு நடிகர் கார்த்தி அதாவது சூர்யாவின் தம்பி நான் மகான் அல்ல என்னும் திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்தில் ஒரு காட்சியில் குழந்தை நட்சத்திரமாக ஒரு குழந்தை நடித்திருக்கும்.
அந்த குழந்தை தற்போது கார்த்தியின் அண்ணன் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்ததுபலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. அவர் வேறு யாருமில்ல தெலுங்கு திரை உலகில் இளம் நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி ஷெட்டி தான். இவர் தற்போது பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என செம்ம சூப்பராக இருப்பதால் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன.
இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் திரைப்படங்களும் வெற்றியை ருசித்து வருவதால் இவரது மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இளம் நடிகை கீர்த்தி ஷெட்டிக்கு தமிழ் சினிமா பக்கம் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கி உள்ளது.
அந்த வகையில் பாலா – சூர்யா இணைந்து ஒரு புதிய படத்தில் பணியாற்றி வருகின்றனர் இந்த படம் சூர்யாவுக்கு 41 வது படமாக அமைந்து உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இவர் சூர்யாவின் தம்பி கார்த்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.