Actress Sara Arjun: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் பிரபலம் அடைந்தவர்கள் பலர் உள்ளனர் அப்படி குழந்தை நட்சத்திரமாகவே பலகோடி சம்பாதித்து எக்கச்சக்கமான சொத்துக்களை வைத்திருக்கும் கோடீஸ்வரி சாரா சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம்.
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான 404 என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் சாரா அர்ஜுன். இவர் தனது ஐந்து வயதிலேயே திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
விக்ரமுக்கு மகளாக நடித்து பிரபலமான சாரா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார். அதோட மட்டுமல்லாமல் தெய்வத்திருமகள் படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் நடித்திருந்தது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
இதன் மூலம் பிரபலமாகி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் நந்தினி கதாபாத்திரத்தின் சிறுவயது கேரக்டரில் நடித்திருந்தார்.
இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது இரண்டு பாகங்களும் ரூபாய் 800 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. 18 வயதாகும் சாரா ஹீரோயினாக நடிக்கவும் தொடர்ந்து உள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வரும் சாரா 10 ஆண்டுகளில் ஏராளமான சொத்துக்களை சேர்த்து வைத்துள்ளார்.
அதன்படி குழந்தை நட்சத்திரமாக நடித்தே சுமார் ரூ.10 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுக்கு சொந்தகாரியாக சாரா இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் பொழுது இவ்வளவு சொத்துக்களை சேர்த்து வைத்த சாரா இதற்கு மேல் ஹீரோயினாக நடித்து பல கோடிக்கு சொந்தகாரியாக உள்ளார்.