தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகை நயன்தாரா. தற்பொழுது இவர் பிரபல நடிகர் படமொன்றில் முதலமைச்சரின் மகளாக நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
அந்தவகையில் மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதையும் ஒரு உலுக்கு உலுகிய திரைப்படம் லூசிபர். இத்திரைப்படத்தில் அரசியல்வாதியாகவும், கேங்ஸ்டராகவும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியாவையும் தன்பால் ஈர்த்தவர் நடிகர் மோகன்லால்.
இத்திரைப்படம் மோகன்லால் நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட்டானது. எனவே திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிப்பதற்கு பிரித்திவிராஜ் முதற்கட்ட வேலையை ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் பொதுவாகவே எந்த மொழியாக இருந்தாலும் சரி ஒரு படம் வசூல் ரீதியாகவும், வீமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டால் அந்த திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது வழக்கம்.
அந்த வகையில் லூசிபர் திரைப்படம் இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் ரீமேக்காக உள்ளது. இத்திரைப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகரான சிரஞ்சீவி நடிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் 200 கோடி அளவில் உருவாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் துவங்க இருந்த நிலையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் தற்பொழுது தான் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
மலையாளத்தில் வெளியாகி இருந்த இத்திரைப்படத்தில் முதலமைச்சரின் மகளாக முன்னணி நடிகையான மஞ்சுவாரியார் நடித்திருந்தார். எனவே தெலுங்கு ரீமேக்கில் நடிகை நயன்தாராவை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். ஆனால் நடிகை நயன்தாரா கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.
பிறகு வேறு எந்த நடிகையை நடிக்க வைக்கலாம் என்று சில நடிகைகளை அழைத்துள்ளார்கள். ஆனால் தற்போது மீண்டும் நயன்தாரா தான் தெலுங்கு ரீமேக்கில் முதலமைச்சரின் மகளாக நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.