தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக பல டாப் நடிகர்களின் படங்களை தயாரித்து இவரது ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனத்தில் வெளியிட்டு வந்தார் உதயநிதி ஸ்டாலின். பின்பு ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் நடிகராகவும் வலம் வந்தார். அப்படி முதல் படமாக ஒரு கல் ஒரு கண்ணாடி.
அதை தொடர்ந்து கதிர்வேலன் காதல், நண்பேண்டா, சைக்கோ, கண்ணே கலைமானே, மனிதன் போன்ற பல படங்களில் டாப் ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடித்து தமிழில் முக்கிய நடிகராக பார்க்கப்பட்டார். மேலும் உதயநிதி ஸ்டாலின் அரசியலிலும் களமிறங்கி தற்போது திமுக இளைஞரணி செயலாளராகவும் சட்டமன்ற தொகுப்பாளராகவும் பல பொறுப்புகளில் வகித்து வருகிறார்.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளிவந்த கனா படத்தில் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நெஞ்சுக்கு நீதி என்ற திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து உள்ளார். மேலும் இந்த ப்படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இந்த படம் பாலிவுட்டில் வெளிவந்த ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக் ஆகும்.
இந்த படத்தின் கதை மிக சிறப்பாக அமைந்துள்ளதாகவும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் போலீஸ் கெட்டப்பில் பல பேருக்கு முன்னுதாரணமாக நடித்து உள்ளார் எந்த தகவல்கள் வெளியாகிய நிலையில் சமீபத்தில் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதில் பல நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து தமிழகத்தின் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்து படத்தில் நடித்த நடிகர்கர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலருக்கும் வாழ்த்தை தெரிவித்துள்ளார் இதனால் படக்குழு மிக மகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.