Actor Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையை நடத்தி வருகிறது. இந்நிலையில் ரஜினி விமர்சனத்திற்கு செய்யாறு பாலு அதிர்ச்சி கூறிய தகவலை பகிர்ந்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் உருவாகி கடந்த வியாழன் கிழமை வெளியாகி வசூலை குவித்து வருகிறது.
அப்படி தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்திருக்கும் நிலையில் திரையரங்குகளில் படத்தினை பார்ப்பதற்காக ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். கண்டிப்பாக ஜெயிலர் படம் 700 கோடி முதல் 800 கோடி வரை வாசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தர்பார், அண்ணாத்த போன்ற படங்களின் தோல்வியிற்கு பிறகு ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் நல்ல விமர்சனத்தை ரஜினிகாந்த் பெற்றிருப்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள். 72 வயது ஆனாலும் கூட சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினிகாந்த் நிரூபித்துள்ளார்.
இவ்வாறு ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஏராளமான தகவல்களை பகிர்ந்துக் கொண்ட ரஜினிகாந்து குடிப்பழக்கம் மட்டும் எனக்கு இல்லாமல் இருந்து இருந்தால் இதை விட உயரத்திலிருந்து இருப்பேன் என்று சொல்லி இருந்தார். இவ்வாறு ரஜினிகாந்த் குடிப்பழக்கம் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அரசியலில் ஒரு ரவுண்டு வந்திருப்பார்.
ஏனென்றால் கடந்த 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்ட பின்பும் காவிரி நீரை தர மறுத்த கர்நாடகாவை எதிர்த்து பாரதிராஜா தலைமையில் கர்நாடகாவிற்கு மின்சாரம் தரக்கூடாது என்று நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது அதில் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை. எனவே கர்நாடகாவில் உள்ள 40 லட்சத்து தமிழர்கள் தாக்கப்பட்டார்கள் என்பதனால் ரஜினி போராட்டத்தை புறக்கணித்தார். நெய்வேலியில் போராட்டம் நடத்திய பாரதிராஜா ரஜினி ஒரு துரோகி என்றும் கருப்பு ஆடும் என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
ஆனால் கடைசியில் நெய்வேலி போராட்டம் வெற்றிகரமாக முடிந்தவுடன் அடுத்த நாளே ரஜினி சென்னை சேப்பாக்கத்தில் காவிரி நீரை கேட்டு தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். இந்த உண்ணாவிரதத்திற்கு எந்த திரை பிரபலங்களும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று நினைத்த நிலையில் பாரதிராஜாவை தவிர ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு இந்த உண்ணாவிரதம் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்குச் சென்ற ரஜினி அப்பொழுது ஆளுநராக இருந்த ராமமோகன் ராவின் செயலாளரிடம் தமிழகத்திற்கு காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்து விடப்படும் என்று மனு அளித்தார். இதனிடத்தில் செய்தி வாசிப்பாளர்கள் பாரதிராஜா உங்களை துரோகி என்றும் கரும்பாடு என்றும் சொல்லியிருப்பது குறித்து கேள்வி எழுப்ப அதற்கு பதில் அளித்த ரஜினி, அவர் உணர்ச்சிப்பட்டு பேசியிருப்பார், அவர் என் நண்பர் தான் என்று கூறியுள்ளார். இவ்வாறு ரஜினி நடத்திய உண்ணாவிரதத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்த நிலையில் இதனை பார்த்து அரசியல் கட்சித் தலைவர்களும் மிரண்டு போனார்கள் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.