Dhanush-Rajinikanth: தனுஷ் திருமணமான நடிகை ஒருவருடன் மிகவும் நெருக்கமாக பழகுவதை அறிந்துக் கொண்ட ரஜினிகாந்த் நேராக அந்த நடிகையின் வீட்டிற்கு சென்று மிரட்டியதாக பிரபல பத்திரிகையாளர் பேட்டியில் கூறியுள்ளார்.
மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகிய இருந்தாலும் தமிழ் படங்கள் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை அமலாபால். தமிழில் மைனா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி, ராட்சசன் ஆகிய திரைப்படங்களின் மூலம் மாபெரும் வெற்றியினை பெற்றார். இந்த படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றதால் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக அவதாரம் எடுத்தார்.
இந்த சமயத்தில் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட இவர் சில மாதங்கள் மட்டுமே ஒன்றாக வாழ்ந்து வந்த இந்த தம்பதியினர்கள் பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர். விவாகரத்திற்குப் பிறகு அமலாபால் தனுஷ் உடன் மிகவும் நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வந்தது. மேலும் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷும் அமலா பாலும் இணைந்து நடித்ததன் மூலம் இவர்களுக்கு நெருக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.
பிறகு தனுஷ்-அமலா பாலுக்கு இடையே நெருக்கமான ஒரு உறவு இருப்பதனை தெரிந்துக் கொண்ட தனுஷின் மாமனாரான ரஜினிகாந்த் அமலாபாலின் வீட்டுக்கு நேரடியாக சென்று மிரட்டியதாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூடியதாவது, கேரளாவில் சாதாரண ஒரு மிடில் கிளாஸ் ஃபேமிலியில் பிறந்தவர் தான் அமலா பால்.
அவரது அம்மா ஒரு போலீஸ் மாடலிங் துறை மீது மகளுக்கு இருந்த ஆசை அறிந்த அவர் அதற்கு உதவியாக இருந்துள்ளார். பின்னர் தமிழ் சினிமாவுக்கு வந்த ஆரம்பத்தில் வீரசேகரன் என்ற படத்தில் நடித்த அது தோல்வியடைய சிந்து சமவெளி என்ற சர்ச்சை கூறிய படத்தில் நடித்த அமலா பாலுக்கு மைனா திருப்முனையாக அமைந்தது. பின்னர் விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்து உச்சம் சென்றார்.
தலைவா படத்தில் வொர்க் பண்ணும் போது ஏ.எல் விஜய் மீது அமலாபாலுக்கு காதல் மலர்ந்தது இவர்களின் காதலுக்கு ஏஎல் விஜய் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்தது. அதை மீறியும் தான் அமலா பாலை கரம்பிடித்தார். திருமணத்திற்கு பின்னரும் சினிமா முடித்துக் கொண்ட இரவு லேட்டாக வீட்டிற்கு வருவது ஏ.எல்.விஜய்யின் குடும்பத்தினர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
பின்னர் இதுவே பெரும் பிரச்சனையாக மாறி இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த விவாகரத்திற்கு தனுஷின் சில்மிஷனுமும் ஒரு காரணம். வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில் அமலாபால் உடன் நெருக்கம் ஏற்பட்ட அவரது வீட்டிலேயே தங்க ஆரம்பித்துள்ளார் தனுஷ். இந்த விவகாரம் ரஜினியின் காதுக்கு செல்ல மகளின் வாழ்க்கைக்காக அமலாபாலின் அப்பார்ட்மெண்டுக்கு சென்று அவரை எச்சரித்துள்ளார்.
தனுஷ் ஒரு குடும்பஸ்தன், அவருக்கும் மனைவி குழந்தைகள் எல்லாம் இருக்கு அவர விட்டுடுங்க இல்லைன்னா ரஜினியின் இன்னொரு முகத்தை பார்க்க வேண்டியது இருக்கும் என மிரட்டி இருக்கிறார். இதையெல்லாம் அப்பொழுது அரசியல் புறசலாக செய்திகளாக வெளிவந்தது. இந்த சம்பவத்துக்கு பின் அமலா பாலுக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டதால் அவர் கேரளா போய்விட்டார் என செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.