உன் ரூ.4000 கோடி சொத்தும் வேண்டாம்.. நீயும் வேண்டாம்.. விஜய் தேவரகொண்டாவின் அன்பிற்கு அடிமையான சமந்தா

samantha
samantha

Samantha:  நடிகை சமந்தா விஜய் தேவரகொண்டான் பாசத்தில் விழுந்து விட்டதாக பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். நோட்டா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த விஜய் தேவரகொண்டான் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் பெண்களில் மனதை கவர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் குஷி திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் இணைந்து நடித்திருந்தார். இதில் இவர்களுடைய கெமிஸ்ட்ரி ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்தது. குஷி படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக் கொண்ட விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஏராளமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டனர்.

அப்படி விஜய் தேவரகொண்டா தனது திருமணம் காதல் திருமணமாக தான் இருக்கும் என்று கூறியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல் ஆணும் பெண்ணும் கைகோர்த்த நிலையில் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த கை யாருடையதாக இருக்கும் என ரசிகர்கள் தெரிந்துக் கொள்ள ஆர்வமுடன் இருந்து வருகின்றனர். இதனை அடுத்து பிரபல யூட்யூப் சேனல் ஒன்று இருக்கு பேட்டி அளித்த செய்யாறு பாலு எந்தவிதமான சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமாவிற்கு நுழைந்து பல வெற்றி திரைப்படங்களை தந்து தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான குடும்பத்தில் மருமகளானார் சமந்தா.

ஆனால் நாக சைதன்யாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதனால் பிரிந்தார். நாக சைதன்யா  ஜீவனாம்சம் எத்தனை கோடி வேண்டும் என்று கேட்க உன் காசு எதுவும் எனக்கு தேவையில்லை என்று தூக்கிப் போட்டுவிட்டு வந்துள்ளார். ரூபாய் 4000 கோடி சொத்துக்காரரான நாக சைதன்யாவின் சொத்து வேண்டாமென்று தூக்கி போட்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமந்தாவிற்கு முன்பை விட ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த விஷயம் தான் விஜய் தேவரகொண்டாவின் மனதில் சமந்தாயிடம் பிடித்ததற்கு காரணமாக இருக்கலாம். எனக்கு தெரிந்து அந்த கை சமந்தாவின் கையாகத்தான் இருக்கும். இருவரும் திருமணம் செய்துக் கொண்டால் மிக்க மகிழ்ச்சி ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக சொல்லப்படுகிறது. இப்போது ராஷ்மிகா மிகவும் பிசியான நடிகையாக இருக்கிறார் இந்த நேரத்தில் அவர் திருமணம் செய்து கொள்ள வாய்ப்பு இல்லை என்பதால் சமந்தா, விஜய் தேவரகொண்டா இணைந்தால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள் என கூறியுள்ளார்.