நல்லவேளை ஜவான் படத்தில் விஜய் நடிக்கல.! விஜய் சேதுபதியை வீணாக்கிட்டாரு.. உண்மையை புட்டு புட்டு வைக்கும் பிரபலம்

jawan
jawan

Shah Rukh Khan – Vijay: ஜவான் படத்தில் நல்லவேளை விஜய் நடிக்கவில்லை என்றும் ஜவான் படத்திலிருந்த சில சம்பந்தமில்லாத காட்சிகளையும் செய்யாறு பாலு தெரியப்படுத்தியுள்ளார். ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ இதனை தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற தொடர்ந்து அடுத்தடுத்த வெற்றி திரைப்படங்களை தேர்ந்தார்.

இவ்வாறு இந்த படங்களின் மூலம் பிரபலமான அட்லீ பாலிவுட்டிலும் அடி எடுத்து வைத்திருக்கும் நிலையில் கடந்த வியாழன் கிழமை அன்று அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் திரைப்படம் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இருந்தாலும் இந்த படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அப்படி சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்று இருக்கு பேட்டியளித்த செய்யாறு பாலு ஜவான் திரைப்படம் ஏதோ ஒரு விஷயத்தை அழுத்தமாக சொல்லப்போகுதுன்னு எதிர்பார்த்து காத்திருந்த ஆடிஷனை அது திருப்தி படுத்தவில்லை. தியேட்டர்களில் நான் படம் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது என் பக்கத்தில் இருப்பவர் ஒவ்வொரு சினையும் பார்த்து இது இந்த படம், அது அந்த படம் என்று கமெண்ட் செய்து கொண்டு இருந்தார்.

ஜவான் படம் ஆரம்பிக்கும் பொழுது விவசாய கடன் பிரச்சனை, இந்தியா முழுவதும் உள்ள அரசு பிரச்சனைகளின் அவலம், கோபால் விஷவாயு பிரச்சனை, ஊழல் போன்றவற்றை கையில் எடுத்து அட்லீ எதைப் பற்றியும் தெளிவாக சொல்லாமல் திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். மத்திய அரசு பற்றி பேச எதற்கு அட்லீக்கு பயமா இல்லை ஷாருக்கானுக்கு பயமா என்று தெரியவில்லை.

அதேபோல ஜவான் படத்தில் விஜய் சேதுபதியின் வில்லன் கதாபாத்திரம் மிக முக்கியமானது இந்த கேரக்டரை அழுத்தமாக சொல்லாமல் பூசி மொழுவி விட்டார் இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் கதைக்கு ஒரு அழுத்தம் கிடைத்திருக்கும் விஜய் சேதுபதி போன்ற ஒரு நல்ல நடிகரை அட்லீ வீணடித்துவிட்டார்.

அவரை மட்டுமல்ல நயன்தாரா, பிரியாமணி, சஞ்சய் தத் ஆகிய அனைத்து கதாபாத்திரங்களும் வேஸ்ட்டா போச்சு. அட்லீ இந்த கதையை முதலில் தளபதிக்கு தான் சொல்லியிருந்தார் கதை கேட்ட பின் விஜய் வேண்டாம் என்று பின்வாங்கிய பிறகுதான் இந்த கதையை ஷாருக்கான் சொல்லப்பட்டது நல்ல வேலை இந்த படத்தில் விஜய் நடிக்கவில்லை.

மேலும் ஷாருக்கான் போன்ற ஸ்டார் நடிகருக்கு பாதி படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே படம் எப்படி இருக்கும் என்று கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஷாருக்கான் இதை எப்படி கவனிக்காமல் விட்டார் என்று தெரியவில்லை என செய்யாறு பாலு ஜவான் படத்தையும், அட்லீயையும் கிழித்து தொங்கவிட்டுள்ளார்.