Vijayakanth Friendship: நடிகர் அருண் பாண்டியனுக்கும் விஜயகாந்துக்கும் இடையே இருந்த நட்பு குறித்த விபரம் தற்பொழுது வெளியாகி உள்ளது. இயக்குனராகவும், நடிகராகவும் பிசியாக இருந்து வரும் அருண்பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு ஊமை விழிகள் படத்தின் மூலம் அறிமுகமாகி இணைந்த கைகள் படத்தின் மூலம் பிரபலமானவர்தான்.
இவ்வாறு தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமானார் அருண் பாண்டியன். நெல்லையை சேர்ந்த அருண் பாண்டியனுக்கு பூர்வீகமாக சொத்துக்கள் என வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். ஒரு கட்டத்தில் நண்பர்கள் இவரை சினிமாவில் நடிக்குமாறு ஊக்குவித்துள்ளனர்.
எனவே இதற்காக சென்னைக்கு வந்த அருண்பாண்டியன் பிலிம் இன்ஸ்டிடியூஷனில் நடிப்பதற்கான படிப்புகளை படித்து முடித்தார். இந்த நேரத்தில் தான் இவருக்கு ஊமை விழிகள் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை விஜயகாந்த் பெற்று தந்துள்ளார். இதன் மூலம் அருண்பாண்டியன் மற்றும் விஜயகாந்த் இடையே நல்ல நட்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு இவர்களது நட்பு குறித்து பேட்டியளித்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியதாவது, நடிகர் அருண்பாண்டியன் நல்ல வசதி படைத்த குடும்பத்தை சார்ந்தவர். நெல்லையில் ஒரு சாதி ரீதியாகவும் முக்கியமான ஆளாக இருந்தார் தென்னகத்து அபிஷேக் பட்சம் என்று கொண்டாடப்பட்டார். விஜயகாந்த் தான் ஊமை விழிகள் படத்தில் அருண் பாண்டியன் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்.
அதற்கு நன்றியாக தென் மாவட்டத்தில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையில் நடிகர் விஜயகாந்த் மாட்டிக்கொள்ளும் பொழுது எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சாதுரியமாக பிரச்சனையை கையாண்டு அதிலிருந்து விஜயகாந்த்தை மீட்டவர் அருண் பாண்டியன். இதனால் விஜயகாந்தின் குட் புக்கில் இடம் பிடித்தார் அருண் பாண்டியன். அதற்கு நன்றி கடனாக அருண்பாண்டியன் இயக்கிய நடித்த தேவன் என்னும் படத்தில் விஜயகாந்த் கௌரவத் தோற்றத்தில் நடித்திருப்பார். அதற்கு சம்பளம் பெறவில்லை. பின் தேமுதிக ஆரம்பிக்கும்போது அருண்பாண்டியன் தேமுதிக சார்பில் பேராவூரணி தொகுதியில் போட்டியிட்டு வென்றார். பின் இருவருக்கு இடையேயும் மன கசப்பு ஏற்பட்டு அருண்பாண்டியன் அதிமுகவில் இணைந்தார்.
அப்போது கூட விஜயகாந்த் வருத்தப்பட்டு இருக்கிறார். பேட்டியில் அருண் பாண்டியன் விஜயகாந்த் எப்போதும் கேப்டன் தான் என்றும் அவருடன் சுற்றி இருப்பவர்கள் தான் எங்களது பிரிவிற்கு காரணமாக இருந்தார்கள் என்றும் கூறியுள்ளார். நான் விஜயகாந்த்க்கு ஒருபோதும் துரோகம் செய்யவில்லை இப்போதும் அவர் மீதுதான் மிகுந்த பாசமுடன் இருப்பேன் என கூறியுள்ளார்.