Actress Trisha: நடிகை த்ரிஷா ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் முன்னணி நடிகர் ஒருவருடன் மது குடித்துவிட்டு அவருடனே நடிகை த்ரிஷா சண்டை போட்டு இருப்பதாக பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார். ஜோடி படத்தின் மூலம் சிம்ரனின் தோழியாக அறிமுகமாகி பிறகு மௌனம் பேசியதே படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர்தான் நடிகை த்ரிஷா.
இந்த படத்தினை தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். அப்படி கடந்த 2000 ஆண்டிற்கு பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய இவர் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், கார்த்திக், ஜெயம் ரவி என தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் ஜோடி போட்டு விட்டார்.
முக்கியமாக விஜய், த்ரிஷாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை பெரிதளவிலும் கவர அப்படி இவர்கள் இணைந்து நடித்த கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி போன்ற படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனை அடுத்து பல வருடங்கள் கழித்து மீண்டும் விஜய்க்கு ஜோடியாக லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார். லியோ படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்க வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது.
இவ்வாறு த்ரிஷா சினிமாவில் புகழ் அடைந்து இருந்தாலும் இவர் ஏராளமான சர்ச்சைகளில் சிக்குவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியிருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, த்ரிஷா குறித்து பேசுகையில், நடிகை த்ரிஷாவுக்கு குடிப்பழக்கம் அதிகமாக இருந்தது.
ஒரு பெரிய நடிகருடன் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது ஷூட்டிங் பிரேக்கில் அந்த ஹீரோவும் திரிஷாவும் மது குடித்தனர். அந்த சமயத்தில் திரிஷாவிற்கு மது போதை தலைக்கேறிவிட்டது அதனை அடுத்து கேரவனுக்கு சென்ற திரிஷா அந்த நடிகருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டார் இது தொடர்பான பல பத்திரிக்கைகளில் செய்திகளாக வெளியானது. ஆனால் அதற்கு திரிஷா எந்தவிது மறுப்பும் தெரிவிக்கவில்லை என்று கூறினார்.