5 கோடி ஃபோனா போகுது.. நல்ல வேலை தல தப்பிச்சது வணங்கான் படத்திலிருந்து தெறித்து ஓடிய சூர்யா.!

BALA
BALA

Actor Surya: இயக்குனர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதலில் பாலா இயக்க நடிகர் சூர்யா தான் வணங்கான் படத்தில் நடித்தார். ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தினால் இந்த படத்திலிருந்து சூர்யா விலகிக் கொண்டார். அதன் பிறகு அருண் விஜய் கமிட்டாகி நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வருகிறது.

நடிகர் சூர்யா இயக்குனர் பாலா கூட்டணியில் நந்தா, பிதாமகன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை கண்டது. சூர்யாவிற்கு திருப்புமுனையாக அமைந்த இந்த படங்கள் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது. எனவே இதனால் 18 ஆண்டுகள் கழித்து மீண்டும் வணங்கான் படத்தில் இந்த கூட்டணி உருவானது.

இந்த படத்தினை சூர்யாவின் 2டி என்டர்டைமென்ட் நிறுவனம் தயாரிக்க ஷூட்டிங் கன்னியாகுமரியில் தொடர்ந்து 35 நாட்கள் நடைபெற்றது. பொதுவாக பாலா தன்னுடைய படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை மிகவும் கஷ்டப்படுத்தி நடிக்க வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது இது குறித்து ஏராளமானவர்கள் பேட்டியில் கூறியிருந்தனர்.

அப்படி சூர்யா இந்த படத்தின் கதை குறித்து கேட்க  இது கேட்டவுடன் மிகுந்த கோபமடைந்த பாலா சூர்யாவை பல கிலோமீட்டர் ஓடவிட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறு 35 நாட்கள் ஷூட்டிங் நடைபெற்று முடிந்த நிலையில் இதனால் சூர்யாவிற்கு தயாரிப்பாளராக 5 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறதாம். பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு சமீபத்தில் சூர்யா குறித்து பேசி இருக்கிறார்.

அதாவது 35 நாட்கள் சூட்டிங் நடந்து முடிந்த நிலையில் சூர்யாவிற்கு தயாரிப்பாளராக 5 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்ட போதிலும் சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற படங்களில் நடித்து பான் இந்தியா ஸ்டாராக உருவாக்கிய சூர்யா வணங்கான் படத்தில் தொடர்ந்து நடித்து தன்னுடைய பெயரை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்றும் அதனால் தான் இந்த முடிவை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அப்படி இதனை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் போஸ்டர் ஒன்று வெளியானது ஒரு கையில் பிள்ளையாரையும், ஒரு கையில் பெரியாரையும் ஏந்தியபடி வந்த போஸ்டரில் அருண் விஜய் காணப்படுகிறார். மேலும் இந்த போஸ்டரில் முழுமையாக சேறு பூசிய படி காணப்படும் அருண் விஜய் தோற்றத்தில் சூர்யாவை பிரதிபலிக்கும் வகையில் காணப்படுகிறது. சூர்யாவை வெறுப்பேற்றும் வகையில் இந்த போஸ்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளதா என்றும் செய்யாறு பாலு கேள்வி எழுப்பி உள்ளார். சூர்யா படத்தில் இருந்து விலக இந்த போஸ்டர் இது குறித்து கேட்ட பொழுதுதான் அவர்களுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என்றும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.