தமிழ் சினிமாவில் இன்று வெற்றி இயக்குனராக ஓடிக் கொண்டிருப்பவர் பாண்டியராஜ். பசங்க என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் முதல் படமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து வம்சம், மெரீனா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, இது நம்ம ஆளு, பசங்க 2, கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை, எதற்கும் துணிந்தவன் என பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார்.
இப்படிப்பட்ட பாண்டிராஜ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த போது பல அசிங்கங்களையும், அவமானங்களையும் சந்தித்து இருக்கிறார் அதுபற்றி விலாவாரியாக பார்ப்போம்.. வறுமையின் காரணமாக சினிமா உலகிற்கு வந்தார் முதலில் பாக்கியராஜ் ஆபீஸில் வேலை பார்த்து வந்தார் பிறகு நடிகரும், இயக்குனருமான சேரனிடம் உதவி இயக்குனராக அறிமுகமானார்.
சேரன் சம்பளம் கொடுக்க மாட்டார் ஆனால் சினிமா எப்படி இருக்கும் என்பதை சொல்லிக் கொடுப்பாராம்.. சேரன் ஆட்டோகிராப் படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் ஆள் பார்ப்பதற்கு அமைதியாக தான் இருப்பாராம். ஆனால் கோபம் வந்துவிட்டால் கடுமையாக திட்டி விடுவாராம். ஆட்டோகிராப் படப்பிடிப்பின் போது பாண்டிராஜனை சேரன் கடுமையாக திட்டிவிட்டார்.
அந்த கோபத்தில் படப்பிடிப்பில் இருந்த ஒருவரை கண்டமேனிக்கு திட்டிவிட்டார் ஆனால் அந்த நபர் சினேகாவின் மேக்கப் மேன். அவரும் ஒன்னுக்கு இரண்டாக சினேகாவிடம் பத்தி வைக்க சினேகா கோபமாகி சேரனிடம் சொல்லி இருக்கிறார் இதனால் காண்டான சேரன் பாண்டியராஜனை கூப்பிட்டு மொத்த யூனிட் முன்னாடியும் கண்ணா பின்னா என்று திட்டிவிட்டாராம்..
இதைத் தாங்கிக் கொள்ள முடியாத அவர் இனிமேல் இந்த தொல்லையை தாங்கிக் கொள்ள முடியாது என வேலையை விட்டு கிளம்பி பின் சிம்பு தேவன் மற்றும் தங்கர் பச்சான் ஆகியவர்களுடன் பணியாற்றி பின் இயக்குனர் அவதாரம் எடுத்தாராம்..