மும்பை இந்தியன்ஸ் வீரர்களை வாங்க துடிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.! எவ்வளவு காசு போனாலும் பரவில்லை அந்த மூன்று வீரர்களை வாங்கியே ஆகணும்.?

csk-and-mi
csk-and-mi

அடுத்த வருடம் கோலாகலமாக ஐபிஎல் 15வது சீசன் நடக்க இருக்கிறது இந்த முறை இரண்டு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டு 10 அணிகள் விளையாட இருக்கிறது. ஏற்கனவே இருந்த எட்டு அணிகள் நான்கு வீரர்களை மட்டுமே தன்வசப்படுத்திக் கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக்கொண்டது.

இதனையடுத்து ஒவ்வொரு அணியும் அதன்படி செய்தது சென்னை அணி ரவிந்திர ஜடேஜா,  தோனி, அலி, ருத்துராஜ் அவர்களை தன் வசப்படுத்திக் கொண்டு மீதி வீரர்களை ரிலீஸ் செய்து உள்ளது. அடுத்த வருடத்திற்கான போட்டிக்கு முன்பு மெகா ஏலம்  ஒன்றை நடத்த இருக்கிறது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

அந்த மெகா ஏலத்தில்  சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களை வாங்க அதிக முயற்சிக்கும் என பேசப்பட்டு வருகிறது அதிலும் குறிப்பாக சிறந்த வீரர்களாக இருக்கும் மூன்று வீரர்களை எடுக்க உள்ளது அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் விக்கெட் கீப்பரும் தொடக்க ஆட்டக்காரரான இஷன் கிஷன் வாங்க அதிக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்ததாக நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளராக வலம் வரும் டிரென்ட் போல்ட் சமீபகாலமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் அவரையும் எடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது 3வது வீரராக இந்திய அணியில் இப்பொழுது இடம்பிடித்துள்ள..

சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சஹரை வளைத்துப் போடவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இந்த முக்கிய மூன்று வீரர்களை சென்னை அணி தூக்கும் பட்சத்தில் சிஎஸ்கே மிகப்பெரிய பலம் வாய்ந்த அணியாக இன்னும் விஸ்வரூபம் எடுக்கும்.