கொரோனா – சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! என்ன தெரியுமா.?

rajee
rajee

கொரோனா தற்பொழுது தீவிரமாக பரவி வரும் நிலையில் சென்னையில்தான் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருந்தது. இந்த நிலையில் தற்போது எட்டு மண்டலங்களில் குறைந்துள்ளது என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் மொத்தம் 15 மண்டலங்கள் உள்ளது.

இந்தநிலையில் கொரோனா தீவிரமாக இருந்ததால் கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவே மக்களும் அதனை ஓரளவுக்கு பின்பற்றியதால் எட்டு மண்டலங்களில் ஒரே வாரத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என்பது சென்னை மக்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

அந்த வகையில் திருவொற்றியூர் மண்டலத்தில் 2.7 சதவீதம், மாதவரத்தில் 3.4 சதவீதம்,  தண்டையார்பேட்டை 1.9 சதவீதம், ராயபுரம் 3.27 சதவீதம், அம்பத்தூர் 0.9%,  தேனாம்பேட்டை 2.8%, கோவிலம்பாக்கம் 4%, வளசரவாக்கம் 0.7 சதவீதம் என கொரோனா உச்சத்தில் இருந்து தற்போது கனிவாக குறைய தொடங்கியுள்ளது என்பது அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

ஒரு சில மண்டலங்களில் குறிப்பிடத்தக்க அளவு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே இனிமேல் அந்த மண்டலங்களில் மிகவும் கவனமாக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.