சென்னையில் உள்ள பழைய ஓஎம்ஆர் காரப்பாக்கம் மேம்பாலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஒருவர் சூப் கடை நடத்தி வருகிறார் சாலையோரத்தில் இந்த சூப் கடை மாலை 5 மணி முதல் இரவு வரை தள்ளுவண்டியில் ஆட்டுக்கால் சூப் சுட சுட ரெடி செய்து விற்று வருகிறார். இங்கு வாடிக்கையாளர்கள் சூப் குடித்து விட்டு எலும்பு துண்டுகளை கீழே போட்டு விட்டு செல்கிறார்கள்.
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து ஆள் நடமாட்டம் இல்லாத பொழுது அக்கம்பக்கத்தில் பார்த்துவிட்டு கீழே கிடக்கும் எலும்புத் துண்டுகளை ஆளில்லாத நேரத்தில் எடுத்து தண்ணீரை ஊற்றிக் கழுவிவிட்டு மீண்டும் சூடு பாத்திரத்தில் போட்டு சுட வைத்து விற்பனை செய்கிறார்.
இந்த காட்சியை அருகில் உள்ள சிசிடிவி கேமராவில் அப்பட்டமாக பதிவாகியுள்ளது அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோ சென்னை மக்களிடையே மிகப்பெரிய வைரலானது அடுத்து சென்னைவாசிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளார்கள்.
அதுமட்டுமில்லாமல் இந்த சிசிடிவி வீடியோ சென்னை மக்களிடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.