நடு ரோட்டிலேயே கணவர் சடலத்துடன் 12 மணி நேரமாக உட்கார்ந்திருந்த கண்ணு தெரியாத ஜெயாபாட்டி. ! கண்கலங்க வைக்கும் தருணம்

old-lady
old-lady

2 கண்ணுமே தெரியாத ஜெயா பாட்டி தன் கணவர் உயிரிழந்த சடலத்துடன் மயிலாப்பூர் ரோட்டில் 12 மணி நேரமாக உட்கார்ந்திருந்த அவலம் நடைபெற்றுள்ளது. கொரோனாவால் அடிமேல் அடிவாங்கி வரும் சென்னையில் இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்தவர் தங்கப்பன் மற்றும் ஜெயா தம்பதி இவர்களுக்கு வீடு வாசல் எதுவும் கிடையாது இவர்களின் வீடு வாசல் என்றால் பிளாட்பார்ம் தான், மயிலாப்பூர் பகுதியில் ரோசரி சர்ச் ரோட்டில் உள்ள பிளாட்பார்ம்ல் வாழ்ந்து வந்தார்கள். ஜெயா பாட்டியின் கணவர் தகப்பனுக்கு கால்கள் செயல்படாது, அதேபோல் ஜெயா பாட்டிக்கு கண் தெரியாது, இவர்கள் இருவருமே பிளாட்பார்மை விட்டு நகர முடியாத நிலைமை.

இந்த பகுதியிலேயே இவர்கள் பல வருடங்களாக இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் இந்த தம்பதிக்கு கொஞ்சம் தெரிந்தவர்கள் கூட அதனால் பழக்கப்பட்டவர்கள் என்பதால் அடிக்கடி உணவு தந்து உதவி செய்தார்கள், தகப்பனுக்கு நடக்க முடியாது என்பதால், தன்னார்வலர் ஒருவர் தள்ளு வண்டியை வாங்கி தந்தார், இந்த தள்ளுவண்டி தான் இவர்களுக்கு எல்லாமே.

எதையாவது விற்று பிழைத்துக் கொள்வார்கள் என தள்ளுவண்டி வாங்கி தந்தார்கள், ஆனால் அந்தப் பாட்டி மற்றும் தங்கப்னக்கு அதுதான் வீடு என்றாகிவிட்டது, வயதாகிவிட்டதால் தகப்பனுக்கு திடீரென உடம்பு சரியில்லை அதனால் ஒருசிலர் உதவியோடு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் தங்கப்பனை சேர்த்தார் ஜெயபாட்டி.

ஆனால் அவருக்கு உடல்நிலை அதிக அளவு மோசமாகி விட்டதால் சிகிச்சை தர முடியாது என்று திருப்பி அனுப்பி வைத்துள்ளார்கள் கண் தெரியாத நிலையில் அந்த பாட்டி தன்னுடைய கணவனை எப்படி கவனித்துக் கொள்வது என்று கவலைப்பட்டார் ஆனால் இருந்தாலும் ஜெயா பாட்டி முடிந்தவரை தன்னுடைய கணவரை கவனித்துக் கொண்டார். ஆனால் தங்கப்பன் திடீரென இறந்துவிட்டார் விஷயத்தை கேள்விப்பட்ட அந்த பகுதி மக்கள் உடனடியாக போலீசில் புகார் தந்தனர்.

கொரோனா பயத்தினால் யாருமே முதியவரை அடக்கம் பண்ண முன்வரவில்லை, ஆனால் தங்கப்பன் கழுத்தில் மாலை மட்டும் விழுந்து கிடந்தது, இதைப்பார்த்து ஜெயா பாட்டி அழுதுகொண்டே இருந்தார் அடுத்து என்ன செய்வது எங்கு போவது என்று தெரியாமல் சடலம் பக்கத்திலேயே 12 மணி நேரமாக அழுதுகொண்டிருந்தார்.

பின்பு போலீசார் வந்து தங்கப்பன் சடலத்தை மீட்டு சளி ரத்தமாதிரிகளை எடுத்து கொரொனோ டெஸ்ட் எடுத்து நடத்துவதற்கு ஆம்புலன்சில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள், பின்பு பாட்டி ஆதரவற்ற முகாமில் மாநகராட்சி ஊழியர்கள் சேர்த்தார்கள்.