ஸ்டாண்டாஃப் காமெடியன் மற்றும் மாயா ஆகியோர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள் இதைப்பார்த்த மூடர்கூடம் இயக்குனர் பொங்கி எழுந்து தனது பாணியில் வெளுத்து வாங்கியுள்ளார். பொதுவாக சென்னையில் ஒரு வித்தியாசமாக பேசுவார்கள் அதைதான் சென்னை ஸ்லாங் என பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் சென்னை மக்களின் பேச்சை கிண்டல் செய்யும் விதமாக இருவரும் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஏப்ரல் மாதத்தில் என்பதை ஆப்ரல் மாதம் என்றும் சென்னை மக்கள் பேசுவார் என்பது போலவும் அதனைத்தொடர்ந்து ஸ்டேஷன்., ஜெராக்ஸ், சச்சின், டெண்டுல்கர், தோனி, பேப்பர் ஜீரோ, ஆகிய வார்த்தைகளை சென்னை மக்கள் இப்படித்தான் பேசுவார்கள் என்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ சென்னை மக்களை கேவலப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது அதனால் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்த வீடியோவை பார்த்த இயக்குனர் நவீன் மிகவும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் அவர் கூறியதாவது இங்கிலீஷ்காரன் என்னைக்காவது மற்ற மொழிகளை சரியாக உச்சரித்து உள்ளன. அவன் அவன் நாக்கு எப்படி பேச்சு பழக்கத்திற்கு வந்துள்ளது அப்படித்தான் உச்சரிப்பு வரும்.
நீங்க இப்படி ஒரு மொக்கையா எக்ஸ்பிரஷன் கொடுக்கிறீர்களே அதுக்கு பேருதான் மேட்டுக்குடி புஷ்வாந்தனம் எங்க ஊர்ல இதற்குப் பெயர் தான் உலப்பிலும்மு எனக் கூறுவார்கள் இவ்வாறு அவர்கள் இருவரையும் வெளுத்து வாங்கியுள்ளார். நவீன் இவ்வாறு பேசியதை பார்த்து பல ரசிகர்கள் நவீனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
Your Chennai accent is so sexy! pic.twitter.com/96FERUGU8R
— Vishakan Soundararajan (@Vishak_Sound) September 15, 2021
பொதுவாக காமெடி என்ற அழைப்பிதழை கொச்சைப்படுத்துவது தான் என்று நினைத்துக் கொண்டு பலரும் இதுபோல் செய்து வருகிறார்கள் அதனால் காமெடி என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் போகிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சமீபத்தில் மறைந்த விவேக்கின் கடைசி நிகழ்ச்சி தான் Lol எங்க சிரி பார்ப்போம் இந்த நிகழ்ச்சியில் அபிஷேகம் மற்றும் மாயா ஆகிய இருவரும் போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் இறுதி டைட்டிலை வென்றவர் குக்வித் கோமாலி பிரபலம் புகழ்தான் ஆனாலும் அபிஷேக் மற்றும் மாயா சென்னை கிண்டல் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்லீஸ்காரன் என்னிக்காவது வேற மொழிய சரியா உச்சரிச்சிருக்கானா? அவவென் நாக்கு எப்படி பழகிருக்கோ அப்படித்தாண்டா உச்சரிப்பு வரும். நீங்க மொக்கயா ஒரு எக்ஸ்பிரஷன் குடுக்கறிங்கல்ல, அதுக்கு பேருதான் மேட்டுக்குடி பூஷ்வாத்தனம். எங்க ஊருல உங்களுக்கு பேரு #ஊலப்பிலிமு
pic.twitter.com/SSwX3QOAdm— Naveen Mohamedali (@NaveenFilmmaker) September 16, 2021