அஜித் நடிப்பில் வெளியாகிய காதல் கோட்டை என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் அகத்தியன். இவர் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அந்த திரைப்படங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது அதிலும் அஜித்தை வைத்த இயக்கிய காதல் கோட்டை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அகத்தியன் மகள் விஜயலட்சுமி இவர் சினிமா உலகில் ஹீரோயினாக நடித்து வந்தவர். என்னதான் ஹீரோயினாக நடித்து இருந்தாலும் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை பெற முடியாமல் கிடைத்த கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் இதுவரை அஞ்சாதே, சரோஜா, அதே நேரம் அதே இடம், சென்னை 6 லட்சத்து இருபத்தி எட்டு என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஒரு காலகட்டத்தில் இவருக்கு வாய்ப்பு குறையத்தொடங்கியது அதனால் சீரியல் பக்கம் தனது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்தார் அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வந்த நாயகி சீரியலில் கதாநாயகியாக வலம் வந்தார். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வைல்ட் கார்டு என்ட்ரியாக வாய்ப்பு கிடைத்ததால் நாயகி சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறி கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய அழகான பேச்சாலும் திறமையாலும் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.
ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டதை பெற முடியவில்லை பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சீசன் ஒன்றில் கலந்து கொண்டு நடுவராக பணி ஆற்றினார் இந்தநிலையில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் சிறிதுகாலம் தலைகாட்டாமல் இருந்த இவர் தற்பொழுது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சர்வேயர் நிகழ்ச்சியில் தனது திறமையை நிரூபித்து வருகிறார்.
சர்வேயர் நிகழ்ச்சியில் போட்டிகளில் விளையாடி வருகிறார் அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குட்டையான உடையணிந்து கொண்டு அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இதை பார்த்த ரசிகர்கள் அங்கேயும் உங்களுக்கு கவர்ச்சி காட்ட தோன்றுகிறதா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.