சின்னத்திரையில் படும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் காமெடி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை பிடிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பெரும் பிரபலம். முதல் சீசன் சற்று வித்தியாசமாக சமையல் தெரிந்த போட்டியாளர்களுடன் சமையல் தெரியாத காமெடி பிரபலங்களை இறக்கி கலக்கி வந்தனர்.
அது மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாவது சீீதனம் ஒளிபரப்பாகியது இது மாபெரும் வெற்றியைப் பெற்று தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த நிகழ்ச்சியில் வயது வித்தியாசம் பார்க்காமல் ஜட்ஜ் ஆக இருந்து வரும் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவருமே மற்ற குக்குகள் மற்றும் கோமாளிகள் இடம் சகஜமாக பேசி வருகின்றனர்.
இது மக்கள் பலருக்கும் நெகிழ்ச்சி அளித்துள்ளது. இந்த சீசனில் பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை போன்ற கோமாளிகள் பலரும் வாரம் வாரம் புதுப்புது கெட்டப்புகளில் வந்து மக்களை என்டர்டெயின்மென்ட் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பலரும் மக்களிடையே..
பிரபலமடைந்து சினிமாவிலும் கால்தடம் பதித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த குக் வித் கோமாளி மூன்று சீசன்களிலுமே ஜட்ஜாக இருந்து வந்தவர் செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்கி வந்தவர் ரக்சன் ஆவார். கோமாளிகள் அனைவரிடமும் சகஜமாக பேசி வரும் செப் தாமு.
நடிகர் விஜய் நடித்துவரும் பீஸ்ட் படத்திலிருந்து சமீபத்தில் வெளிவந்த ஜாலியோ ஜிம்கானா பாடலுக்கு செஃப் தாமு அவரது மக்களுடன் இணைந்து நடனம் ஆடி வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகின்றன. வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.