உலக நாயகன் கமலஹாசன் நான்கு வருடங்கள் கழித்து விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றதன் காரணமாக எதிர்பாராத வசூலை விக்ரம் பட குழு அள்ளியது. இதுவரை விக்ரம் திரைப்படம் உலக அளவில் சுமார் 420 கோடியும், தமிழகத்தில் 175 கோடியும் அள்ளி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமலஹாசன் இந்தியன் 2, தேவர்மகன் 2 திரைப்படங்களில் நடிக்க ரெடியாக இருக்கிறார். அதில் முதலாவதாக ஏற்கனவே நடித்த இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்க அதிகம் கமல் ஆர்வம் காட்டுவார் என தெரிய வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் உலக நாயகன் கமலஹாசன் எனக்கு யார் பலமான போட்டியாளர் என்பது குறித்து அவர் விலாவாரியாக பேசி உள்ளார் அது குறித்து தற்பொழுது பார்ப்போம். நடிகர் கமல் சொல்லியது : எனக்கு பலமான போட்டி, அத்தியாசமான போட்டி, அற்புதமான போட்டியாக நான் நினைத்து கொண்டிருக்கிறேன் எனக்கு இணையாக இன்னொருவர் வந்து கொண்டிருக்கிறார்.
அப்பொழுது நான் புரிந்து கொண்டேன் இனி நடக்கக்கூடாது ஓட வேண்டும் என்று சொல்லிக் கொண்டேன் நான் ஓட ஓட அவரும் என்னுடன் ஓடிக் கொண்டிருக்கிறார் அவர் என்னுடைய சக ஒட்டக்காரர். அந்த நடிகர் வேறு யாரும் அல்ல நடிகர் ரஜினி தான் என கூறி அதிர வைத்தவர்.
மேலும் பேசிய நடிகர் கமல் இதில் யார் ஜெயிக்கிறோம் என்பதில் முக்கியமில்லை நாங்கள் இருவரும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இன்னமும் ஓடுவோம் என சிரித்த புன்னகை உடன் சொன்னார் உலக நாயகன்.