Check out how actress Samantha benefits from Lockdown.:நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர். இவர் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் திருமணத்துக்கு பின்னும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதை அனைவரும் அறிந்ததே.
கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் வீட்டிலேயே முடங்கியுள்ள நடிகர், நடிகைகள் போரடிக்காமல் இருப்பதற்காக சமூகவலைதளங்களில் தான் அன்றாடம் செய்யும் வேலைகளை புகைப்படம் மற்றும் வீடியோக்களாக பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
அந்தவகையில் நடிகை சமந்தா இந்த ஊரடங்கு உத்தரவு நாட்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்வதற்காக ஹாலிவுட் நடிகை ஹெலன் மிர்லனரிடம் நடிப்பது எப்படி என்று கற்றுக் கொண்டிருக்கிறார்.
மேலும் அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கண்டிப்பாக நான் நல்ல நடிகையாக வளர்ந்து வருவேன் அப்படி இல்லை என்றால் பதிவை நான் நீக்கி விடுவேன் என்றும் கூறியுள்ளார்.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இப்போது நீங்கள் நல்ல நடிகைதான் மேலும் சிறந்த நடிகையாகவும் கண்டிப்பாக வளர்வீர்கள் என்று கமென்ட் செய்துள்ளனர். தற்போதும் இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.