ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேறவே முடியாது..! சமந்தாவை நாசுக்காக சுட்டிக்காட்டிய சித்தார்த்..!

sidharth-1
sidharth-1

தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாக முன்னணி நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை சமந்தா இவர் திருமணம் செய்து கொண்டு மிக சந்தோஷமாக இருந்த நிலையில் தற்போது விவாகரத்து பெற்றுக்கொண்டதாக வந்த செய்தியானது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய கணவருடன் எதற்காக விவாகரத்து செய்து கொண்டார் என்ற காரணம் மட்டும் இன்றும் யாருக்கும் தெரியாமல் இருந்து வருகிறது.  அந்த வகையில் இவர்கள் எதற்காக பிரிந்தார்கள் என்றும் தெரியாமல் இருந்த நிலையில் தற்போது இவர்களுடைய நான்காவது திருமணநாள் கொண்டாடுவதற்கு முன்பாகவே இப்படி ஒரு செயல் நடந்தது பலரையும் கஷ்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் சமந்தாவின் முன்னாள் காதலன் சித்தார்த் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நான் பள்ளியில் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால் ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேறவே மாட்டார்கள் என்று பதிவிட்டிருந்தார்.

sidharth-2
sidharth-2

இவ்வாறு சித்தார்த் வெளியிட்ட பதிவை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தாவை குறிப்பிட்டு தான் இவர் இப்படி ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார் என பலரும் கூறி வருகிறார்கள்.நடிகர் சித்தார்த்தும் சமந்தாவும் டோலிவுட்டில் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது.

sidharth-3
sidharth-3

அந்த வகையில் இவர்கள் இருவரும் டேட்டிங் செல்வதும் ஊர் சுற்றுவதும் என சந்தோஷமாக இருந்தார்கள் பின்னர் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அதன் காரணமாக சித்தார்த் சமந்தாவின் காதலுக்கு குட்பை சொல்லிவிட்டார்.

இவ்வாறு காதல் பிரிவிற்கு பிறகு ஆக நடிகர் சித்தார்த் நாகூர் பிரியாணி உளுந்தூர் பேட்டையில் இருக்கிற நாய்க்கு தான் கிடைக்கணும்னு இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும் என்று குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு அவர் கூறியதை பார்த்து சமந்தாவை தான் இப்படி  கூறி உள்ளார் என்று பலர் நினைத்த நிலையில் நான் என்னுடைய திரைப்படத்தில் வந்த வசனத்தை தான் கூறி இருந்தேன் என விளக்கம் அளித்துள்ளார்.

sidharth-4
sidharth-4