பணம் வாங்கி ஏமாற்றிய எஸ். ஜே. சூர்யா.. மிகப்பெரிய தண்டனையை வழங்கிய திரையுலகம்.? இனி எழுந்திருக்கவே முடியாது

SJ-surya
SJ-surya

சினிமாவில் இயக்குனரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யா. தமிழில் அஜித்தை வைத்து வாலி எனும் படத்தை இயக்கி அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தது. அதைத் தொடர்ந்து அடுத்து ஒரு டாப் நடிகரான விஜய்யை வைத்து குஷி என்னும் படத்தையும் இயக்கி வெற்றி கண்டார்.

இந்த இரண்டு படங்களுமே அஜித் மற்றும் விஜய் கேரியரில் ஒரு முக்கிய படமாக பார்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எஸ் ஜே சூர்யா இசை, அன்பே ஆருயிரே போன்ற ஒரு சில படங்களை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்தும் வந்தார். ஹீரோவாக எஸ் ஜே சூர்யா நடித்த படங்களும் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வந்த நிலையில் திடீரென தனது டிராக்கை மாற்றி டாப் ஹீரோக்களின் படங்களில் வில்லன் ரோலில் மிரட்டி வருகிறார்.

இப்போ பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிப்பில் ஆர் சி 15 என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் எஸ் ஜே சூர்யா ஒரு முக்கிய ரோலில் பிஸியாக நடித்தும் வருகிறார் இப்படி தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி சினிமாவில் ஓடிக் கொண்டிருக்கும் எஸ் ஜே சூர்யாவிற்கு “ரெட் கார்ட்” போடப்பட்டு சினிமாவில் நடிக்க தடை செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளி வருகின்றன.

அது ஏன் என்றால் பல வருடங்களுக்கு முன்பு ஞானவேல் ராஜா படத்தில் நடிக்க எஸ் ஜே சூர்யா அட்வான்ஸ் வாங்கி இருந்தாராம். அப்பவே அட்வான்ஸ் தொகையை திருப்பி தர எஸ் ஜே சூர்யா முன் வந்தாராம், ஆனால் முடியவில்லை.. அட்வான்ஸ் தொகையை கொடுக்கவில்லை என்றால் படம் கொடுங்கள் என ஞானவேல் ராஜா கேட்க, வாங்கிய அட்வான்ஸ் தொகையை தருகிறேன் என எஸ் ஜே சூர்யா கூறியுள்ளார்.

ஞானவேல் ராஜா அட்வான்ஸ் தொகையோடு சேர்த்து வட்டியையும் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டாராம். இந்த பேச்சு வார்த்தையின் போது பிரச்சினையாகி தற்போதைக்கு எஸ் ஜே சூர்யாவுக்கு ரெட் கார்டு போடப்பட்டுள்ளது. காமெடி நடிகர் வடிவேலுவை தொடர்ந்து அடுத்து எஸ் ஜே சூர்யாவுக்கு ரெட் கார்டு பிரச்சினை வந்துள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.