படத்தின் வெற்றியை கொண்டாடிய “சார்பட்டா பரம்பரை” படக்குழு – வெளியான சூப்பர் புகைப்படம்.

sarpatta
sarpatta

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படம் சார்பட்டா பரம்பரை. படம் வெளிவந்து ரசிகர்களையும் தாண்டி இயக்குநர்களையும், தயாரிப்பாளர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இந்த திரைப்படம் சமீபகாலமாக ரசிகர்களை கவர்ந்தாலும் சினிமா பிரபலங்களை அவ்வளவு எளிதில் ஒரு திரைப்படம் கவர்ந்து இழுத்து விட முடியாது அதை செய்து காட்டியது இத்திரைப்படம். மேலும் பல்வேறு விருதுகளையும் இந்த படம் தற்போது அள்ளி வருகிறது.

பொதுவாக ஒரு படத்தில் கதையின்படி  ஹீரோ ஹீரோயினுக்கு தான் முக்கிய கதாபாத்திரமாக படம் எடுக்கப்பட்டிருக்கும் ஆனால் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் அற்புதமான சீன்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் ஹீரோ, ஹீரோயினை தாண்டி மற்ற நடிகர்களும் நல்ல ரோல் கொடுக்கப்பட்டது.

அந்த வகையில் ஆர்யாவை தொடர்ந்து சபீர், ஜான் கொக்கேன், பசுபதி, ஜான் விஜய், கலையரசன் போன்ற பலரும் மிரட்டி இருந்தனர். இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படக்குழு படத்தின் வெற்றியை கொண்டாடியது அந்த நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் அனைவரும் ஒன்று சேர்க்கப்பட்டனர்.

அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த சபீர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வேகம் எடுத்துள்ளது.

இதோ நீங்களே பாருங்கள்.

sarpatta
sarpatta
sarpatta
sarpatta