நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வந்தார். இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது படக்குழுவினரை சேர்ந்த எட்டு பேருக்கு கோரோனோ தோற்று உறுதியானது அதனால் படக்குழுவினர் அங்கிருந்து உடனே எஸ்கேப் ஆனார்கள்.
அரக்கப்பரக்க நடிகை நயன்தாரா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அனைவரும் வீடு திரும்பினார்கள். நடிகை நயன்தாரா அடுத்ததாக விக்னேஷ் சிவனின் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து முடிக்காமல் அவரால் விக்னேஷ் சிவனுடன் அதிகமாக ஊர்சுற்ற முடியவில்லை, அதனால் மிகவும் தவியாய் தவித்து வந்தார் நயன்தாரா. இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஊர் சுற்ற ஆரம்பித்து விட்டார்கள்.
மேலும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி மிகவும் கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்களை சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதை பார்த்த ரசிகர்கள் என்னடா இது கொடுமை மீண்டும் இருவரும் இணைந்து விட்டீர்களா? என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் சில ரசிகர்கள் கிறிஸ்துமஸ் ட்ரீட் இதுதானா இந்த ட்ரீட் எங்களுக்கா இல்ல விக்னேஷ் சிவனுக்கா என கமெண்ட் செய்துள்ளார்கள். ஆனால் இதையெல்லாம் நயன்தாரா மற்றும் விக்கி கண்டுகொள்ளாமல் அடுத்தது எங்கே ஊர் சுற்றலாம் என்பதை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.