சார்பட்டா பரம்பரை படம் எங்க எரியா படம்.. இது மட்டும் நல்லா இருந்தா போதும் நானே கொண்டாடுவேன் – பிரபல இயக்குனர் அதிரடி.

sarpatta paramparai
sarpatta paramparai

திரை  உலகில் புதுமுக இயக்குனர்கள் சிறப்பான படைப்புகளை கொடுத்து தன்னை வெளிக்காட்டிக் கொண்டு வருவதால் வெகு விரைவிலேயே உச்ச நட்சத்திரங்களின் படங்களை இயக்க ஆயுதமாய் இருக்கிறார்கள். அந்த வகையில் சமீபகாலமாக பல டாப் நடிகர்களை வைத்து ஹிட் படங்களை கொடுத்து உள்ளனர்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் விஜயை வைத்து மாஸ்டர் படத்தை எடுத்தார். அதுபோல ஹச். வினோத் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும்  வலிமை   படத்தை எடுத்து உள்ளார். இவர்களை போல பல புதிய தலைமுறை இயக்குனர்கள் நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன அந்த வகையில் லிஸ்டில் இணைந்து உள்ளவர்தான் மோகன்ஜி இவர் எடுத்துள்ள சமீபகால திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது.

அதிலும் கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான திரௌபதி படம் வேற லெவல் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது ருத்ர தாண்டவம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படியிருக்க சமீபத்தில் ரசிகர்கள் உரையாடும்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் சார்பட்டா பரம்பரை படம் குறித்து தனது கருத்தை  சொன்னார் இயக்குனர் மோகன்ஜி அவர் பேசியது.

ஒரு ட்ரைலரை பார்க்கும் பொழுது தெரியவே கடினமாக உழைப்பும், தரமும் காண முடிகிறது இது எங்க ஏரியா படம் படத்தின் கரு கதை களம் ஆகியவை சிறப்பாக இருந்தால் நானே கொண்டாடுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வருகிற 22-ஆம் தேதி வரையிலும் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் ஆர்யா மற்றும்  பா. ரஞ்சித் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து இருந்தார்.