இரண்டாவது முறையாக கமலுடன் கைகோர்த்த சூர்யா- விக்ரம் படத்தில் என்ன கதாபாத்திரம் தெரியுமா.?

kamal
kamal

இளம் இயக்குனர்கள் பலரும் எடுத்த உடனேயே டாப் நடிகர் நடிகைகளுக்கு கதை கூறி சிறந்த ஹிட் படங்களை கொடுத்து சினிமா உலகில் நிரந்தர இடத்தை பிடிக்கின்றனர். அந்தவகையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் டாப் ஹீரோக்களை வைத்து கைதி, மாஸ்டர் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர்.

தற்போது இவர் உலக நாயகன் கமலஹாசனை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை உருவாக்கி உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் நடிப்பில் இந்த படம் உருவாகி உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழை தவிர பல மாநிலங்களிலும் இந்த படத்தின் வரவேற்பு அமோகமாக இருக்கின்றன.

இந்த நிலையில் நேற்று விக்ரம் படத்தில் இருந்து கமலஹாசன் குரலில் இன்ட்ரோ பாடல் “பத்தல பத்தல” என்ற குத்து பாடல் வெளியாகியது. நீண்ட இடைவேளைக்கு பிறகு கமல் படத்தில் அவரது சொந்த குரலில் பாடல் இடம்பெற்றுள்ளதால் இந்த பாடலை ரசிகர்கள் பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற மே 15ஆம் தேதி நடைபெறும் என தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் கமலுடன் முக்கிய நடிகர்களான விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் போன்றவர்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

நடிகர் சூர்யா இந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் சூர்யா கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த மன்மதன் அம்பு என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.