பிரமாண்டமாக உருவாக இருக்கும் சந்திரமுகி 2.! இதோ மிரட்டலான தகவல்

chanthiramuki

2005ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படத்தில் வடிவேலு, ஜோதிகா, நயன்தாரா, பிரபு மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தார்கள் இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம்  நல்ல விமர்சனங்களை பெற்று வைரலானது.

இந்த திரைப்படம் வெற்றி பெற்றதால் இதன் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு படக்குழு ரெடி ஆனார்கள் இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது அதாவது சந்திரமுகி திரைப்படத்தில் மனோதத்துவ கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

மேலும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் மீண்டும் ஜோதிகா நடிப்பாரா என்பது புரியாத புதிராக இருந்து வருகிறது இந்த நிலையில் சந்திரமுகி 2 திரைப்படத்தைப் பற்றிய புது தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வேட்டையன் கதாபாத்திரத்திம் முழு வடிவமாக இருக்கும். அந்த அரண்மனைக்கு ஒரு புதிய குடும்பம் குடி வருவதாகவும் அவர்களுக்கு வேட்டையன் கதாபாத்திரத்துக்கும் மோதல் வருவது தான் படத்தின் கதை என கூறப்பட்டது. இந்த நிலையில் மே மாதம் இரண்டாவது வாரம் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

Chandramukhi
Chandramukhi