இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள துணிவு திரைப்படம் கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. துணிவு திரைப்படம் வெளி வருவதற்கு முன்பு பல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய துணிவு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா செய்யாதா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.
ஏனென்றால் ஏற்கனவே ஹெச் வினாத்துடன் இணைந்து வலிமை மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகிய இரண்டு படங்களை கொடுத்துள்ளார். இந்த இரண்டு படங்களும் சுமாரான வெற்றியை தான் தந்தது அந்த வகையில் துணிவு திரைப்படம் வெற்றி பெறுமா பெறாதா என்ற குழப்பம் பலருக்கும் இருந்தது.
இந்த நிலையில் ஜனவரி 11ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வருகிறது. இதனை தொடர்ந்து துணிவு படத்தின் வெற்றியை குறித்து இயக்குனர் ஹெச் வினோத் அவர்கள் தற்போது சபரிமலைக்கு சென்று உள்ளார். இவர் சபரிமலைக்கு செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனை தொடர்ந்து இயக்குனர் ஹச் வினோத் சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார் அப்போது துணிவு படபடிப்பில் நடந்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்துள்ளார் இந்த நிலையில் துணிவு திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை மாற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முதல் பாதையில் ரசிகர்களுக்காகவும் இரண்டாவது பாதியில் ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது என கூறிய ஹெச் வினோத் அதன் பிறகு கிளைமாக்ஸ் காட்சியில் முதலில் கதாநாயகன் கதாநாயகியும் இறப்பது போல காட்சி வைக்கப்பட்டிருந்தது ஆனால் சமூக கருத்தை முன்வைக்க வேண்டும் என்ற காரணத்தால் கதாநாயகியும் கதாநாயகமும் இறக்காமல் நோ கட்ஸ் நோ குளோரி என்ற டயலாக் இடம் பெற்று இருக்கும் என்று கூறியுள்ளார். கதாநாயகனும் கதாநாயகியும் இறந்திருந்தால் இந்த படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் எனக் கூறி வருகிறார்கள்.