SA Chandrasekar : தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வெற்றி கண்டு வருபவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் முதலில் இயக்குனராக தான் திரை உலகில் அறிமுகமானர். ஆரம்பத்திலேயே நல்ல நல்ல படங்களை கொடுத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
ஒரு கட்டத்தில் விஜயகாந்த் உடன் கைகோர்த்து சட்டம் ஒரு இருட்டறை, நெஞ்சிலே துணிவிருந்தால், நீதி பிழைத்தது, பட்டத்து ராஜாக்கள், ஓம் சக்தி, சாட்சி, வெற்றி, குடும்பம் என பல வெற்றி படங்களை இந்த ஜோடி கொடுத்தது. அடுத்து தனது பையன் விஜயை வைத்து அடுத்தடுத்த படங்களை எடுத்து அவரையும் பலருக்கு விட்டார்.
தற்பொழுது எஸ் ஏ சந்திரசேகர் படங்களை இயக்குவதை ஓரமாக வைத்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் இவர் கடைசியாக நடித்த மாநாடு, நான் கடவுள் இல்லை, டிராஃபிக் ராமசாமி போன்ற படங்களும் வெற்றி பெற்றது.
சின்னத்திரைகளும் கவனம் செலுத்தி வருகிறார் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கிழக்கு வாசல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இப்படி ஓடிக்கொண்டிருந்த சந்திரசேகருக்கு அண்மையில் ஒரு ஆபரேஷன் செய்யப்பட்டது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
நான் எப்பொழுதும் மிக ஆக்டிவாக இருக்கக்கூடிய ஒரு நபர் ஆனால் கடந்த இரண்டு, மூன்று மாதங்களாகவே எனக்கு ஒரு மாதிரியாகவே ரொம்ப எனர்ஜி குறைவாக இருந்த மாதிரி இருந்தது மருத்துவரிடம் சென்று ஸ்கேன் செய்தபோது தான் தெரிந்தது எனக்கு சர்ஜரி செய்ய வேண்டும் என்றார்கள். இந்த விஷயத்தை நான் எதற்கு கூறுகிறேன் என்றால்.. வாழ்க்கையில் ஒவ்வொருதருக்கும் நல்லது கெட்டது நடக்கும்..
எல்லாவற்றையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் ஏதாவது பிரச்சனையை வந்தால் நாம் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள எஸ் ஏ சந்திரசேகர் ஆப்ரேஷன் செய்த பிறகும் விஜய் வந்து பார்க்காததால் மன வருத்தத்தில் பேசியுள்ளார் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.