சந்திரமுகி – 2 படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர் – படக்குழு எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.!

chandramugi 2
chandramugi 2

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான பல படங்களை கொடுத்து தனது திறமையை வெளி உலகத்திற்கு காட்டியவர் இயக்குனர் பி வாசு இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 2005ஆம் ஆண்டு சந்திரமுகி என்னும் படத்தை இயக்கி வெற்றி கண்டார்.

இந்த படத்தில் ரஜினியுடன் கைகோர்த்து ஜோதிகா, நயன்தாரா, விஜயகுமார், நாசர், வடிவேலு, பிரபு என மிகப்பெரிய ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து அசத்தி இருந்தனர் இந்த படம் ஆக்ஷன் மற்றும் திரில்லர் படமாக இருந்ததால் அனைவருக்கும் பிடித்த திரைப்படமாக அப்பொழுது மாறியது.

இந்த திரைப்படமும் நல்ல விமர்சனத்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் ருத்ரதாண்டவம் ஆடியது இந்த படம் ரஜினி கேரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக தற்போது வரை இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது பாகத்தை எடுக்க இயக்குனர் விவாதிக்கவும் திட்டம் போட்டார் ஆனால் எந்த ஒரு தயாரிப்பு நிறுவனமும் முன்வரவில்லை.

ஒருவழியாக லைக்கா நிறுவனம் முன்வந்து  திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டார் ஆனால் ரஜினி சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டேன் என தெளிவாக கூறி அதை எடுத்து ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் சந்திரமுகி 2 படத்தில்  நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சந்திரமுகி முதல் படத்தில் ரஜினி வடிவேலு காமெடி எப்படி மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது அதேபோல சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து வடிவேலு நடிக்கிறார். பி வாசு, ராகவா லாரன்ஸ், வடிவேலு மற்றும் தயாரிப்பு நிறுவனம் ஆகிய அனைவரும் இணைந்து தற்போது புகைப்படம் எடுத்துக் கொண்டனர். நிச்சயம் சந்திரமுகி 2 ஒரு மிரட்டலான படமாக உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது இதோ நீங்களே பாருங்கள் சந்திரமுகி 2 குழுவுடன் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படம்.

vadivelu
vadivelu