Chandramukhi 2: சந்திரமுகி 2 திரைப்படம் வருகின்ற வெள்ளிக்கிழமை முன்னிட்டு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதே தேதியில் விஷாலின் மார்க் ஆண்டனி படமும் வெளியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் திடீரென சந்திரமுகி 2 ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா, அபிநயா, ரிது வர்மா, சுனில் ஆகியோர்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் மார்க் ஆண்டனி. இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியான பொழுது கூட பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை ஆனால் சமீபத்தில் வெளியான டீசர் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்திருக்கிறது இதன் காரணமாக ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.
அப்படி செப்டம்பர் 15ஆம் தேதி அன்று மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் ஆனால் நடிகர் விஷால் முன்னதாக லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை திறப்பி செலுத்தாததால் படத்திற்கு தடை கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே இந்த தடையை நீக்கக்கோரி விஷால் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளனர்.
மேலும் விஷாலின் வங்கி கணக்கு விபரங்களை சமர்ப்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் கூற விஷால் உத்தரவின் படி கேட்டுக் கொண்டதால் பிறகு மார்க் ஆண்டனி படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே செப்டம்பர் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் மார்க் ஆண்டனி படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கி உள்ளது.
மேலும் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் சந்திரமுகி 2 படமும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் தொழில்நுட்ப ரீதியான வேலைபாடுகள் இன்னும் முடியாத காரணத்தினால் செப்டம்பர் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என பட குழுவினர்கள் அறிவித்துள்ளனர். எனவே மார்க்கண்டணியின் டீசர் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்திருக்கும் நிலையில் கண்டிப்பாக ரிலீசாகி இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.