கடந்த 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வினித், மாளவிகா, நாசர், வடிவேல் ஆகிய நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சந்திரமுகி.
பேய் கதை களம் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் வடிவேலுவின் நடிப்பு மற்றும் காமெடி மிகவும் ரசிக்கும்படி அமைந்தது, 2005ல் மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம், வெறும் 20 கோடி பட்ஜெட்டில் தான் உருவானது.
ஆனால் இந்த திரைப்படம் இந்தியாவில் மட்டும் 45 கோடி வரை வசூல் செய்தது, அதேபோல் வெளிநாட்டில் 30 கோடி வரை வசூல் செய்தது, ஆக மொத்தம் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 75 கோடி ரூபாய் வசூல் செய்தது, இந்த திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.