Chandramukhi collection : கடந்த 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, நாசர், வினீத் விஜயகுமார், ஷீலா, தியாகு, சோனு சூட், கஜேந்திரன், மோகன்ராஜ் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த திரைப்படம் தான் சந்திரமுகி இந்த திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 17 வருடங்கள் ஆகிவிட்டன. இந்தத் திரைப்படத்தை சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
அதேபோல் பி வாசு இயக்கத்தில் வெளியாகிய இந்த திரைப்படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மனோ தத்துவ டாக்டர் ஆக நடித்திருந்தார். ஒரு பங்களாவில் இருக்கும் சந்திரமுகி அந்த வீட்டு பெண்களின் உடம்பில் புகுந்து கொள்ளும் அதிலிருந்து எப்படி அந்த பெண்ணை மீட்டு எடுக்கிறார் ரஜினி என்பதுதான் படத்தின் கதை.
வடிவேலுவுடன் ரஜினி பல காமெடி காட்சிகளில் நடித்து மிரட்டி இருந்தார் இந்த அளவு இறங்கி ரஜினி நடிப்பாரா என கேட்கும் அளவிற்கு அவரின் நடிப்பு இருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் மக்களின் மனங்கவர்ந்த திரைப்படமாக இருந்து வந்தது. மேலும் திரைப்படம் வெளியாகி நூறாவது நாள் 150 வது நாள் 200 வது நாள் என ஓடிக்கொண்டிருந்தது கிட்டத்தட்ட 800 நாட்கள் இந்த திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது இனி வரும் திரைப்படத்தால் இந்த சாதனையை நேருங்ககூட முடியாது.
சாந்தி திரையரங்கில் ரஜினி நடித்த சந்திரமுகி திரைப்படம் 804 நாட்கள் வரை வெற்றிகரமாக ஓடியது. மேலும் இந்த திரைப்படத்தின் பட்ஜெட் வெறும் 19 கோடி தான் ஆனால் இந்த திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் அன்றைய காலகட்டத்தில் 60 முதல் 90 கோடி வரை வசூல் செய்து இருந்ததாக தகவல் இருக்கிறது ஆனாலும் கிட்டத்தட்ட 100 கோடி இருக்கும் எனவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
பட்ஜெட்டை விட மூன்று மடங்கு லாபத்தை சந்திரமுகி திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் பெற்று கொடுத்தது. 17 வருடங்களுக்கு பிறகு சந்திரமுகி இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது ஆனால் பலரும் முதல் பாகம் லெவலுக்கு இரண்டாவது பாகம் இல்லை என கருத்து தெரிவித்து வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் ரஜினி சந்திரமுகி திரைப்படத்தில் கட்டி வைத்திருந்த மனக்கோட்டையை இரண்டாவது பாகம் தகர்த்து விட்டது என கருத்து தெரிவிக்கிறார்கள்.
என்னதான் சந்திரமுகி இரண்டாவது பாகம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருந்தாலும் முதல் பாகத்தின் சாதனையை ஒரு நாளும் முறியடிக்க முடியாது என ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். சந்திரமுகி இரண்டாவது பாகத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, லட்சுமிமேனன், மகிமா நம்பியார் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.