தமிழ் சினிமாவில் அதிகப்படியான ஹிட் படங்களை கொடுத்த நடிகர்களில் ஒருவர் ரஜினி. 40 வருடங்களாக சினிமா உலகில் நடித்துக் கொண்டிருக்கும் ரஜினி தற்போது கூட வருடத்திற்கு ஒரு சூப்பரான படத்தை கொடுக்க ரெடியாக இருக்கிறார் அந்த வகையில் தனது 169வது திரைப்படத்தில் நடிக்க அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் ரஜினி நடித்த சந்திரமுகி படம் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது அதாவது ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் இரண்டாவது பாகம் உருவாகயிருக்கிறது முதல் பாகத்தை எடுத்த இயக்குனர் வாசு இந்த படத்தை எடுக்கிறார் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் லைகா நிறுவனம்.
இந்த படத்தை தயாரிக்கிறது சந்திரமுகி இரண்டாவது பாகத்தில் ரஜினி கிடையாது அந்த கதாபாத்திரத்திற்கு ராகவா லாரன்ஸ் என உறுதியான தகவல் வெளியானது இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் காமெடி நடிகர் வடிவேலு நடிக்கிறார். அதன் புகைப்படங்கள் கூட அண்மையில் வெளிவந்து உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் சந்திரமுகி இரண்டாவது பாகத்தில் கதாநாயகி யார் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது முதலில் சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடிக்கிறார் என தகவல்கள் வெளியானது ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின்படி ஜோதிகா நடிக்கவில்லை.
சந்திரமுகி இரண்டாவது பாகத்தில் கதாநாயகியாக ராசி கண்ணா அல்லது ஆண்ட்ரியா இவர்களில் யாரேனும் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது இதுகுறித்து விரைவில் படக்குழு அதிகாரப்பூர்வ தகவல் அளிக்கும் என கூறப்படுகிறது.