நீ கால்ல சலங்கை கட்டி கண்ணுல மைய பூசி பரதம் ஆடுவதை எவன்டா பாப்பான் மிரட்டலாக வெளியானது சந்திரமுகி 2 ட்ரைலர்.

Chandramukhi 2 - Trailer
Chandramukhi 2 - Trailer

Chandramukhi 2 – Trailer : கடந்த 2005 ஆம் ஆண்டு பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு, வினித் ஆகியோர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் சந்திரமுகி இந்த திரைப்படம் வெளியாகி பட்டித் தொட்டி எங்கும் பிரபலமானது அது மட்டும் இல்லாமல் வசூலில் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது மேலும் சந்திரமுகி திரைப்படம் திரையரங்கில் பல நாட்களாக ஓடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் மீண்டும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்தார்கள் கிட்டத்தட்ட பல வருடம் கழித்து தற்போது தான் அது நினைவாகியுள்ளது.

மீண்டும் சந்திரமுகி இரண்டாவது பாகத்தையும் பி. வாசு தான் இயக்கியுள்ளார். ஏற்கனவே முதல் பாகம் காமெடி ஹாரர் ஜானரில் உருவானது. இந்த நிலையில் இரண்டாவது பாகமும்   அதே போல் உருவாகி உள்ளது. இந்த இரண்டாவது பாகத்தில் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் லட்சுமிமேனன், வடிவேலு, சிருஷ்டி டாங்கே,  ராதிகா சரத்குமார் ஆகியவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் அதேபோல்  கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்திற்கு கீரவாணி தான் இசையமைத்துள்ளார் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ளது. முதல் பாகத்தை போல் இரண்டாவது பாகம் மாபெரும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் சந்திரமுகி இரண்டாவது பாகத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி உள்ளது இந்த ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ட்ரெய்லரில் ஆரம்பத்தில் ராஜாதி ராஜா ராஜ கம்பீர, ராஜ மார்த்தாண்ட, ராஜ குல திலக வேட்டையன் ராஜா வரார் வரார் வரார்  என ஆரம்பிக்கிறது.

இதனைத் தொடர்ந்து 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே பங்களாவிற்கு வருகிறார்கள் அந்த பங்காளவிற்கு ஓனர் வடிவேலு என கூறுகிறார்கள். இதுவரைக்கும் யாரும் தெற்கு பக்கம் போகலையே போயிடாதீங்க எனக் கூற  அதற்கு போனா என்ன என கேட்கிறார்கள். அதற்கு வடிவேலு  நீ காலில் சலங்கை கட்டிக்கிட்டு கண்ணுல மை பூசி கிட்டு பரதம்  ஆடுனா யாருடா பாப்பா என காமெடியாக கூறுகிறார்.

அதேபோல் உங்க பிரச்சனையை தீர்த்து கொள்ள மறுபடியும் ஒரு பிரச்சனை யில் மாட்டி கொள்ள போறீங்க என சாமியார் அறிவுறுத்துகிறார். பிறகு இதற்கு முன்பு இந்த வீட்டில் என்ன நடந்தது என ஒருவர் கேட்க வடிவேலு கதை சொல்ல ஆரம்பிக்கிறார் 17 வருடங்கள் ஆகிறது இந்த வீட்டிற்கு வந்து இந்த வீட்டில் என்னென்னமோ நடந்திருக்கிறது. என வேட்டையன் கதையை கூற 200 வருட பகை அது தீராத பகை என பேசுகிறார்கள். இதோ ட்ரெய்லர்.