ஓடிடியில் ரிலீஸ் ஆகும் சந்திரமுகி 2.. எப்பொழுது தெரியுமா.?

chandramulkhi
chandramulkhi

Chandramukhi 2: ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா போன்றவர்களின் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் சந்திரமுகி. இந்த படத்தினை ரசிகர்கள் பெரிதளவிலும் கொண்டாடிய நிலையில் இதனை அடுத்து எப்பொழுது சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.

அப்படி முதல் பாகத்தை இயக்கிய பி. வாசு தான் இரண்டாவது பாகத்தையும் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியான நிலையில் ரசிகர்கள் சந்திரமுகி படத்தினை விட இரண்டாவது பாகம் பயங்கரமாக இருக்கும் என எதிர்பார்த்து வந்தனர்.

அப்படி பி. வாசு இயக்க சுமார் 18 வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி படத்தின் இரண்டாவது பாகம் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவானது. வேட்டையின் கேரக்டரில் ராகவா லாரன்ஸ் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு இவருடைய நடிப்பு ரசிகர்களை காணவில்லை. இவரைத் தொடர்ந்து கங்கனா ரணாவத், ராதிகா, ஸ்ருஷ்டி டாங்கே, நடிகர் வடிவேலு ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கலவை விமர்சனத்தை பெற்றது. இப்படத்தில் ஒருவருடைய கேரக்டர் கூட சரியாக இல்லை என்றும் அனைத்து கேரக்டர்களும் சொதப்பியிருப்பதாகவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். எனவே வசூல் ரீதியாகவும் பெரிதாக சொல்லும் அளவிற்கு சாதனை படைக்கவில்லை.

இதனை அடுத்து தற்பொழுது சந்திரமுகி 2 திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது நெட்பிளிக்ஸ் தளத்தில் நவம்பர் மாதத்தில் வெளியாக இருக்கிறதாம் விரைவில் இது குறித்த தேதியை படக் குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.