மிரட்டலாக உருவாகி வரும் “சந்திரமுகி 2” – சூட்டிங் ஸ்பாட்டில் காமெடி பண்ணி சிரிக்க வைக்கும் வடிவேலு.! வீடியோ இதோ.

vadivelu
vadivelu

காமெடி நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொண்டவர். ஒரு கட்டத்தில் இவர் ஹீரோவாகவும் இந்திரலோகத்தில் நான் அழகப்பன், 23ம் புலிகேசி போன்ற படங்களில் நடித்திருந்தார் இந்த படமும் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்து வந்த நிலையில் சில பிரச்சனைகள் காரணமாக நடிகர் வடிவேலு.

சினிமாவில் நீண்ட காலம் நடிக்காமல் இருந்தார் தற்போது அந்த பிரச்சனை எல்லாம் முடிவடைந்து நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகிறார்.

இதைத் தொடர்ந்து ஒரு சில நடிகர்களின் படங்களில் காமெடி நடிகராகவும் நடிகர் வடிவேலு கமிட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பி வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், விஜயகுமார், வடிவேல் போன்ற பல பிரபலங்கள் நடித்து வெளிவந்த திரைப்படம் சந்திரமுகி. இந்த படம் வெளிவந்த அப்பொழுதே நல்ல வசூல் வேட்டை நடத்தியது மேலும் ரஜினி ரசிகர்கள் பலருக்கும் இன்றும் ஃபேவரட் படமாக சந்திரமுகி இருந்து வருகின்றன.

இந்த படத்தின் இயக்குனர் பி வாசு சந்திரமுகி இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். அதில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் மற்றும் காமெடி நடிகராக வடிவேலு இணைந்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக லக்ஷ்மி மேனன் நடிக்க உள்ளார் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் இணைந்துள்ளார் எனக் கூறப்பட்டது.

இந்த நிலையில் சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலந்து கொண்ட வடிவேலு சுறா படத்தில் அவர் நடித்து இடம் பெற்றுள்ள ஒரு பிரபல காமெடி ஒன்றை செய்து காண்பித்துள்ளார் இதனை ராதிகா சரத்குமார் வீடியோவாக எடுத்து அவரது சமூக சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகின்றன.