chandramukhi 2 salary details : சந்திரமுகி இரண்டாவது பாகம் இன்று திரையரங்கில் ரிலீஸ் ஆகி உள்ளது இந்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் கங்கனா ரனாவத் ஆகியோர்கள் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்தை முதலில் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்திருந்தது பட குழு ஆனால் சில காரணங்களால் படம் தள்ளிப்போனது.
இந்த நிலையில் இன்று செப்டம்பர் 28ஆம் தேதி இந்த திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இதன் முதல் பாகத்தில் ரஜினி ஜோதிகா நயன்தாரா பிரபு வடிவேல் ஆகியோர்கள் நடித்திருந்தார்கள் இந்த படத்தை பி வாசு அவர்கள் தான் இயக்கியிருந்தார் இந்த நிலையில் இரண்டாவது பாகத்தையும் பி வாசு தான் இயக்கியுள்ளார்.
சந்திரமுகி 2 படத்தில் நடித்த நடிகர் நடிகைகளின் சம்பள விவரம் தற்பொழுது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கங்கனா ரனாவத் இந்த திரைப்படத்திற்கு 20 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் ராகவா லாரன்ஸ் 15 கோடியும் வடிவேலு 2 கோடியும் சம்பளமாக பெற்றுள்ளார்களாம்.
மேலும் இன்னும் இருக்கும் நடிகர் சிருஷ்டி டாங்கே 30 லட்சமும், லட்சுமிமேனனுக்கு 25 லட்சமும், ராதிகா சரத்குமாருக்கு 35 லட்சமும், மிதுன் ஷியாமுக்கு 25 லட்சமும், ராவ் ரமேஷ்க்கு 50 லட்சம், சுரேஷ் மேனனுக்கு 30 லட்சத்தையும் கொடுத்துள்ளார்களாம்.
பி வாசு எழுதி இயக்கி உள்ள இந்த திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. சுபாஷ் கரன் அல்லிராஜா படத்தின் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளதாக கூறுகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக எம் எம் கீரவாணி பணியாற்றியுள்ளார்.